ஹங்குரன்கெத்த மெரிகோல்ட் தோட்டத்தில் ஆபத்தான நிலையில் லயன் குடியிருப்புகள் – அச்சத்தில் வாழும் மக்கள்!

arvloshan.com

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரன்கெத்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட மெரிகோல்ட் தோட்டத்தின் கீழ்ப்பிரிவு, பங்குசீதா இலக்கம் 14 லயன் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், அடிப்படை வசதிகளின்றியும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

கோனகல் நகரிலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில், மெரிகோல்ட் தமிழ் வித்தியாலயத்தைக் கடந்து செல்லும் பாதையின் கீழ்ப்பகுதியில், 200 மீற்றருக்கும் குறைவான செங்குத்தான சரிவில் இந்த லயன் குடியிருப்பு அமைந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் இந்தக் குடியிருப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது, குடியிருப்பின் இரு பக்கங்களிலும் 12 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், இயற்கை அனர்த்த அபாயம் காரணமாகப் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன.

எனினும், மாற்று இடங்களுக்குச் செல்ல வழியின்றி, அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், தற்போது மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 14 முதல் 20 பேர் வரை இடிந்து விழும் அபாயத்திலுள்ள லயன் அறைகளிலேயே தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

மேலும், இப்பகுதியில் சிறுத்தைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதால், தாம் நாளாந்தம் உயிர் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இதன்போது, குறித்த பகுதி மிகவும் ஆபத்தானது என அடையாளப்படுத்தப்பட்டதுடன், அங்கு வசிக்கும் மக்களை உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தமக்கான மாற்றுக் காணிகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், தோட்ட முகாமைத்துவம் அந்தக் காணிகளை வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதாகவும், இதனால் ஏழு குடும்பங்களுக்கான காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை நீடிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இயற்கை அனர்த்த அபாயம், இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகள் மற்றும் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் தமது அவலநிலை தொடர்பில் தற்போதைய அரசாங்கமும் இதுவரை உரிய கவனம் செலுத்தவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ள இந்த நிலைமைக்கு விரைவில் தீர்வு காண்பதுடன், மாற்று இடங்களுக்கான காணிகளை வழங்கி பாதுகாப்பான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

யாழ்ப்பாணம் கொட்டடிக் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு

...

arvoshan.com

கிழக்கில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: பிள்ளையானின் விளக்கமறியல் டிசம்பர் 07ஆம் திகதி வரை நீடிப்பு!

...

arvoshan.com

கொழும்பில் மும்மொழிப் பாடசாலை ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானம்

...

arvoshan.com

பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை அதிகரிக்கப் போவதில்லை – உற்பத்தியாளர்கள் உறுதி

...

arvoshan.com

2026ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் வீதி விபத்துகளில் 2,463 பேர் உயிரிழப்பு – பொலிஸார்

...

arvoshan.com

ஒக்டோபரில் இலங்கையின் பணவீக்கம் 8.5 சதவீதமாக அதிகரிப்பு

...

arvoshan.com

இலங்கையின் முதல் பெண் அமெரிக்கத் தூதராக அருணி ரணராஜா நியமனம்

...

arvoshan.com

அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்!

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டத்தில் ரூ.2 டிரில்லியன் மூலதனச் செலவினம்!

...

arvoshan.com

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 1,193 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

...

arvoshan.com

சிங்கராஜ வனப்பகுதியில் வனவிலங்குகளைச் சேகரித்த குற்றச்சாட்டு: நான்கு சீனப் பிரஜைகளுக்கு 7.64 கோடி ரூபா அபராதம்

...

arvoshan.com

இந்தியாவின் சீரற்ற காலநிலையால் சில இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் – அமைச்சர் எச்சரிக்கை

...

arvoshan.com

வெளிவிவகார அமைச்சில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியம் போலியானதா? – ஹர்ஷ டி சில்வா கேள்வி

...

arvoshan.com

சீனாவுடன் அறிவிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் முதலீடு எங்கே? – அரசாங்கத்திடம் நாமல் ராஜபக்ஷ கேள்வி

...

arvoshan.com

இலங்கையில் தொழிலாளர் சட்டங்களில் பாரிய திருத்தங்கள் – வேலை நேரம், மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களில் புதிய ஏற்பாடுகள்

...