டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 1,193 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள 1,193 பாடசாலை மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மூன்று மாவட்டங்களிலும் உள்ள 135 பாடசாலைகளைச் சேர்ந்த பார்வைக் குறைபாடு காரணமாக மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் மாணவர்கள் பயனடையவுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் கண்டி, தெல்தெனிய, வத்தேகம மற்றும் கட்டுகஸ்தோட்டை கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நவம்பர் 28ஆம் திகதி வத்தேகம சமுத்திரதேவி மகளிர் கல்லூரியில் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
அதே தினத்தில் கம்பளை மற்றும் தெனுவர கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜினராஜ மாதிரிக் ஆரம்பப் பாடசாலையில் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ, நாவுல, கலேவெல மற்றும் மாத்தளை கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நவம்பர் 28ஆம் திகதி விஜய தேசிய பாடசாலையில் இந்த விநியோகம் இடம்பெறவுள்ளது.
நுவரெலியா, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
அதேவேளை, ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அன்றைய தினம் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ், பார்வைக் குறைபாடு கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கும் புதிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கு ஐக்கிய இராச்சியத்தின் ஸ்ட்ரூட் ரோட்டரி கழகம் (Stroud Rotary Club) மற்றும் விஷ் பவுண்டேஷன் (Wish Foundation) ஆகிய அமைப்புகள் அனுசரணை வழங்குகின்றன.