சீனாவுடன் அறிவிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் முதலீடு எங்கே? – அரசாங்கத்திடம் நாமல் ராஜபக்ஷ கேள்வி

arvloshan.com

சீனாவுடன் இணைந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டின் தற்போதைய நிலை என்னவென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து குறித்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குறித்த முதலீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இதுவரையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் என்னவெனக் கேள்வி எழுப்பினார்.

“சீன ஜனாதிபதியுடன் இணைந்து இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் முதலீட்டைக் கொண்டுவருவதற்கான உடன்படிக்கையில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார். அந்த முதலீடு தற்போது எங்கே?” என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த முதலீடு தொடர்பில் அரசாங்கம் பல ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி அறிவிப்புகளை வெளியிட்ட போதிலும், நடைமுறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் சீனாவின் China Merchants உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் இளைஞர்களுக்கான பயிற்சிகள் உள்ளிட்ட மூலதனச் செலவுகளுக்காக 2,119 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 420 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 20 சதவீதம் மாத்திரமே எனச் சுட்டிக்காட்டிய அவர், எஞ்சியுள்ள சுமார் 1.6 பில்லியன் ரூபாயை அரசாங்கம் சேமிப்பாகக் காண்பிக்க முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.

இதற்கிடையில், சீனா, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் கனடா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர் பதவிகள் பல மாதங்களாக வெற்றிடமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் இராஜதந்திர முன்னுரிமைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு அமைப்பின் ஊடாகப் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

சுற்றுலாத்துறை வருமானத்தைக் கணக்கிடும் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் சந்தேகம் வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, இதன் மூலம் சுற்றுலா வருமானம் அதிகரித்துக் காண்பிக்கப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், மிரிஸ்ஸ, உனவட்டுன மற்றும் வெலிகம உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலா வணிக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேவேளை, பெரிய ஹோட்டல் நிறுவனங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினார். மத்திய கிழக்கில் நிலவும் நிலையற்ற சூழலைக் கருத்திற்கொண்டு மாற்று வேலைவாய்ப்புச் சந்தைகளையும் ஆராய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 1,193 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

...

arvoshan.com

சிங்கராஜ வனப்பகுதியில் வனவிலங்குகளைச் சேகரித்த குற்றச்சாட்டு: நான்கு சீனப் பிரஜைகளுக்கு 7.64 கோடி ரூபா அபராதம்

...

arvoshan.com

இந்தியாவின் சீரற்ற காலநிலையால் சில இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் – அமைச்சர் எச்சரிக்கை

...

arvoshan.com

வெளிவிவகார அமைச்சில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியம் போலியானதா? – ஹர்ஷ டி சில்வா கேள்வி

...

arvoshan.com

இலங்கையில் தொழிலாளர் சட்டங்களில் பாரிய திருத்தங்கள் – வேலை நேரம், மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களில் புதிய ஏற்பாடுகள்

...

arvoshan.com

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு – சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டைப் பெற நடவடிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்

...

arvoshan.com

இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை – மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

...

arvoshan.com

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான உறவுகள்’ – சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

...

arvoshan.com

கீழ் கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று இரவு தற்காலிகமாக மூடப்படும்

...

arvoshan.com

PSTA சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் – விரிவான மக்கள் கருத்தறிதலை நடத்த எதிர்க்கட்சி வலியுறுத்தல்

...

arvoshan.com

யோஷித ராஜபக்ஷ, முன்னாள் கடற்படைத் தளபதி ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்

...

arvoshan.com

புதிய களனி பாலத்தின் நுழைவு, வெளியேறும் பாதைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன

...

arvoshan.com

மிதிகமவில் ரயிலுடன் ஜீப் மோதி விபத்து – STF அதிகாரிகள் நால்வர் காயம்; இருவர் கவலைக்கிடம்

...

arvoshan.com

கல்கிசை கடலில் மூழ்கி இந்தியப் பிரஜை உயிரிழப்பு

...