இலங்கையின் முதல் பெண் அமெரிக்கத் தூதராக அருணி ரணராஜா நியமனம்
இலங்கையின் முதல் பெண் அமெரிக்கத் தூதராக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் இலங்கைப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அருணி ரணராஜா படைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரியான அருணி ரணராஜா, தற்போது வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இதற்கு முன்னர் நெதர்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
எனினும், அவர் புதிய பதவியைப் பொறுப்பேற்கும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.