ஷிராந்தி ராஜபக்ஷ அக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

arvloshan.com

முன்னாள் முதன்மைப் பெண்மணி (First Lady) ஷிராந்தி ராஜபக்ஷ, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை (07) காலை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.   

அரசுக்குச் சொந்தமான வங்கியொன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டமை, பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் அப் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   

இந்த விசாரணையானது, ஷிராந்தி ராஜபக்ஷ தலைவராகச் செயற்பட்ட 'சிரிலிய சவிய' அமைப்பின் நிதிச் செயற்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு இவ்வாரத் தொடக்கத்தில் இலங்கை திரும்பிய ஷிராந்தி ராஜபக்ஷ, 'சிரிலிய சவிய' அமைப்பின் நிதி விவகாரங்கள் தொடர்பில் நிதிப் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னர் எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி ஆஜராகவிருந்த நிலையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாடீர மீண்டும் சேவையில் இணைப்பு!

...

arvoshan.com

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்கள் கடும் கவலை!

...

arvoshan.com

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 211,666 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் பயணம்

...

arvoshan.com

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் விடுதலை!

...

arvoshan.com

1,540 கிராம நிலதாரி அதிகாரிகளுக்கு நாளை நியமனக் கடிதங்கள் வழங்கல்

...

arvoshan.com

கல்விச் சபையை அமைக்க ஓராண்டுக்குள் புதிய சட்டமூலம்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம வழக்கு முடியும் வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

கைது செய்யப்பட்ட சிரந்தி ராஜபக்‌ஷ நீதிமன்றில் முன்னிலை

...

arvoshan.com

விமல், கம்மன்பில, திலீத் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு

...

arvoshan.com

பேங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோவுக்கும் அதிகமான 'குஷ்' போதைப்பொருளுடன் 24 வயது இளைஞர் கைது

...

arvoshan.com

சிராந்தி ராஜபக்‌ஷ கைது: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை நிதி மோசடி விபரம் வெளியானது!

...

arvoshan.com

கட்டாய SLS தரச்சான்று இன்றி மின் உபகரணங்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

...

arvoshan.com

வெலிகம துப்பாக்கிச்சூடு: தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: அனோஜன் தாக்கப்பட்டமை குறித்து அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்

...

arvoshan.com

சவூதி மன்னிப்பைச் சுட்டிக்காட்டி நாமல் சாடல்; ஞாணசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கோரிக்கை

...