விநியோகச் சங்கிலி ஊடாக சைபர் தாக்குதல்; BBC உள்ளிட்ட 200 முக்கிய இணையத்தளங்கள் பாதிப்பு!

arvloshan.com

BBC, HSBC வங்கி, Air France மற்றும் IKEA உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 200 இணையத்தளங்கள், பாரிய சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதித் தகவல்களைத் திருடுவதையும், ஆப்பிள் சாதனங்களில் தீங்கிழைக்கும் மென்பொருட்களைப் புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழில்நுட்ப ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

Cyber News வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னணி நிறுவனங்கள் தமது இணையத்தளங்களில் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் Optimizely என்ற டிஜிட்டல் தளத்தின் கருவிகளில், ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் JavaScript குறியீடுகளைப் புகுத்தியுள்ளனர்.

இதன் ஊடாக சுமார் 178 இணையத்தளங்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலின் மூலம் பயனர்களின் கடன் அட்டை விபரங்கள், கிரிப்டோகரன்சி தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட நிதி விபரங்களைத் திருடுவதற்கு ஹேக்கர்கள் முயற்சித்துள்ளனர்.

அத்துடன், ஆப்பிள் சாதனங்களில் மேலதிக தீங்கிழைக்கும் குறியீடுகளைப் பதிவேற்றி, அவற்றைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சைபர் தாக்குதலை முதலில் கண்டறிந்த பாதுகாப்பு ஆய்வாளரான ஸ்கொட் ஹெல்மே (Scott Helme), தனது வலைப்பதிவில் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Zoom, BBC, CNN, Salesforce, GitLab, IKEA, HSBC (ஐக்கிய அரபு இராச்சியம்), Equifax, Air France-KLM, Ledger மற்றும் Peacock உள்ளிட்ட உலகின் அதிகளவில் பார்வையிடப்படும் இணையத்தளங்களும் தாக்குதலுக்கு இலக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நவம்பர் 16ஆம் திகதி சுமார் ஒன்பது மணித்தியாலங்களுக்குள், தாக்குதலுடன் தொடர்புடைய கிரிப்டோகரன்சி பணப்பைகளுக்கு 7,040 அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட இணையத்தளங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து தீங்கிழைக்கும் குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளதாக ஸ்கொட் ஹெல்மே குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள Optimizely நிறுவனம், தமது Web Experimentation சேவையைப் பயன்படுத்தும் சில வாடிக்கையாளர்களைப் பாதித்த பாதுகாப்பு சம்பவம் ஒன்று கண்டறியப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பாதை முடக்கப்பட்டுள்ளதுடன், புகுத்தப்பட்ட தீங்கிழைக்கும் குறியீடுகளும் அகற்றப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

வழுக்கைத் தலைக்கும் தீர்வு கிடைக்குமா? சீன விஞ்ஞானிகளின் புதிய ‘மாயச் சீப்பு’ பரிசோதனையில் வெற்றி!

...

arvoshan.com

பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டிய வாயேஜர் 1 – விண்வெளி ஆய்வில் வரலாற்றுச் சாதனை!

...

arvoshan.com

உள்நாட்டு மென்பொருள் புதுப்பிப்பால் Apple சேவைகளில் பாதிப்பு – சேவைகளை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை!

...

arvoshan.com

AI பயிற்சிக்காக தரவுகளைத் திரட்டும் தானியங்கி பொட்கள் – பல்கலைக்கழக நூலகங்களின் சேவைகள் பாதிப்பு

...

arvoshan.com

முதன்முறையாக விண்கலத்தை வெற்றிகரமாகப் பிடித்து சாதனை படைத்த SpaceX!

...

arvoshan.com

மைக்ரோசொப்ட் சேவைகளில் உலகளாவிய முடக்கம் – ஒரே தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்திருப்பதன் அபாயம் அம்பலம்

...

arvoshan.com

மைக்ரோசொஃப்ட் சேவைகளில் உலகளாவிய முடக்கம் – Outlook, Teams, Copilot பயன்பாடுகளை மீளமைப்பதில் சிக்கல்!

...

arvoshan.com

மைக்ரோசொஃப்ட் சேவைகளில் பரவலான முடக்கம் – Outlook, Teams உள்ளிட்ட சேவைகள் பாதிப்பு!

...

arvoshan.com

காதல் மோசடிக்காகத் திருடப்பட்ட புகைப்படம்; உண்மையான நபரைத் தேடி வந்த காதல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்!

...

arvoshan.com

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகளை நீக்கும் வரை TikTok சேவையை நிறுத்த ஸ்பெயின் கோரிக்கை

...

arvoshan.com

குழந்தையின் வீடியோவை Snapchat-இல் வெளியிட்ட பெண்ணுக்கு சிறைத் தண்டனை – UAE-யிலிருந்து நாடு கடத்தவும் உத்தரவு

...

arvoshan.com

தினசரி வட்டி வழங்குவதாகக் கூறி 6.52 லட்சம் பேரிடம் ரூ.1,211 கோடி மோசடி!

...

arvoshan.com

போலி வேலைவாய்ப்பு நேர்காணல் மற்றும் AI கருவி மூலம் Binance நிறுவனத்திடமிருந்து 6.3 பில்லியன் டொலர் திருட்டு!

...

arvoshan.com

நினைவகச் சிப் விலை உயர்வு; ஆப்பிள் பங்குகள் 4% சரிவு – லாப வரம்பு குறையும் என புதிய தலைமை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை!

...

arvoshan.com

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள் – இஸ்ரோ அறிவிப்பு

...