மகா பருவத்துக்குத் தேவையான உரம் போதியளவில் கையிருப்பில் – தேசிய உரச் செயலகம் அறிவிப்பு

arvloshan.com

எதிர்வரும் மகா பருவ நெற்செய்கைக்குத் தேவையான உரங்கள் போதியளவில் நாட்டில் கையிருப்பில் உள்ளதாகவும், அவற்றை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார்.

மகா பருவத்துக்கு 180,000 மெற்றிக் தொன் யூரியா உரம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதுவரை 33,000 மெற்றிக் தொன் உரம் பிராந்திய மட்டத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 42,000 மெற்றிக் தொன் உரம் தனியார் நிறுவனங்களின் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த மாத இறுதியில் மூன்று கப்பல்கள் மூலம் உரம் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், அவற்றிலிருந்து 98,700 மெற்றிக் தொன் யூரியா உரம் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 44,000 மெற்றிக் தொன் யூரியா உரம் நாட்டை வந்தடையவுள்ள நிலையில், மொத்தமாக 218,000 மெற்றிக் தொன் யூரியா உரம் நாட்டில் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சேற்று உரங்களான இறக்குமதி செய்யப்படும் TSP மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் SSP உரங்களும் போதியளவில் கையிருப்பில் உள்ளன.

இதுவரை 4,396 மெற்றிக் தொன் TSP உரமும், 511 மெற்றிக் தொன் SSP உரமும் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், நிறுவனங்களிடம் 16,700 மெற்றிக் தொன் TSP உரமும், 5,000 மெற்றிக் தொன் SSP உரமும் கையிருப்பில் உள்ளன.

இதற்கு மேலதிகமாக, 21,000 மெற்றிக் தொன் TSP உரம் மற்றும் 5,000 மெற்றிக் தொன் SSP உரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், நிறுவனங்களிடம் மேலதிகமாக 10,000 மெற்றிக் தொன் SSP உரமும் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொட்டாசியம் குளோரைட் (MOP) உரத்தைப் பொறுத்தவரையில், மகா பருவத்துக்கு 57,000 மெற்றிக் தொன் தேவைப்படும் நிலையில், தற்போது 57,500 மெற்றிக் தொன் நாட்டில் கையிருப்பில் உள்ளது.

இதில் சுமார் 5,000 மெற்றிக் தொன் உரம் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், 50,500 மெற்றிக் தொன் உரம் நிறுவனங்களின் கையிருப்பில் உள்ளது. மேலும், 2,000 மெற்றிக் தொன் MOP உரத்தை இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மகா பருவத்துக்குத் தேவையான அனைத்து வகையான உரங்களையும் விவசாயிகள் விவசாய சேவை நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கேப்பாபிலவு நிலமீட்புப் போராட்டக் கொட்டகைக்கு தீ வைப்பு – மர்ம நபர்கள் குறித்து விசாரணை கோரிக்கை

...

arvoshan.com

ABU மாநாட்டை நடத்துவதன் மூலம் ரூ.250 மில்லியன் பெறுமதியான விளம்பர வாய்ப்பு – இலங்கை சுற்றுலாத்துறை

...

arvoshan.com

PickMe Food, Uber Eats சேவைகளை நம்பி அனைவராலும் வாழ முடியாது – எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்திடம் ஹர்ஷா கேள்வி

...

arvoshan.com

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களுக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

...

arvoshan.com

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு – நிதி அமைச்சு அறிவிப்பு

...

arvoshan.com

TIN சான்றிதழுக்காக வருமான வரி அலுவலகங்களுக்கு தேவையின்றி வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

...

arvoshan.com

ஓய்வுபெறும் முப்படையினருக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டம்

...

arvoshan.com

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோருக்கு புதிய நீதிமன்றத் திகதி அறிவிப்பு

...

arvoshan.com

சபரகமுவ மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய 40 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி!

...

arvoshan.com

தும்பர சிறைச்சாலையில் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: புதிய தகவல்கள் வெளியாகின – உறவினர்கள் நீதிகோரி கோரிக்கை

...

arvoshan.com

கெக்கிராவையில் சட்டவிரோத துப்பாக்கிகள், வனவிலங்கு பொருட்களுடன் மூவர் கைது!

...

arvoshan.com

சவூதியில் இலங்கைப் பிரஜைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்தானமை: ஜனாதிபதி அநுரவுக்கு மியன்மார் அமைப்பு பாராட்டு

...

arvoshan.com

யானைகளைப் பாதுகாக்கவும் – மனித - யானை மோதல்களைக் குறைக்கவும் நாடளாவிய நடவடிக்கை ஆரம்பம்!

...

arvoshan.com

மெல்பேர்ன் – கொழும்பு விமானத்தில் அவசரநிலை அறிவிப்பு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்

...

arvoshan.com

ரூ. 79 இலட்சம் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது!

...