போதைப்பொருள் கடத்தல் சந்தேகம் – ஆழ்கடலில் மீன்பிடிப் படகை இடைமறித்த கடற்படை!
இலங்கையின் தெற்குப் பகுதியில் ஆழ்கடலில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைக் கடத்துவதாகச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகொன்றை இலங்கை கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.
குறித்த மீன்பிடிப் படகில் போதைப்பொருட்கள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பெருமளவிலான பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த மீன்பிடிப் படகும் அதிலிருந்த சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகக் கரைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த நடவடிக்கை தொடர்பான மேலதிக விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.