போதைப்பொருள் கடத்தலில் சந்தேகிக்கப்படும் கப்பல் கடற்படையினரால் முற்றுகை – 7 வெளிநாட்டவர்கள் கைது!
தென் தொண்டா கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாடற்ற கப்பலொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, குறித்த கப்பலில் பயணித்த 7 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கப்பலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக நேற்று முன்தினம் (27) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எனினும், குறித்த கப்பலில் கைப்பற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளின் வகை மற்றும் அளவு தொடர்பான விபரங்களை கடற்படை இதுவரை வெளியிடவில்லை.