பேங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோவுக்கும் அதிகமான 'குஷ்' போதைப்பொருளுடன் 24 வயது இளைஞர் கைது
பேங்காக்கில் இருந்து இலங்கைக்கோ விமான மூலம் கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோகிராமிற்கும் அதிகமான 'குஷ்' (Kush) ரக போதைப்பொருளுடன் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, இன்று (07) காலை மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5.166 கிலோகிராம் எடையுடைய 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.