நிர்வாகிகள் கைது: தவெக அரசைக் கண்டித்து அக். 24-ல் நாதக மாநிலம் தழுவிய போராட்டம்!

arvloshan.com

தாராபுரம் தொகுதி வேட்பாளர் மு. கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக். 24) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவரும், கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மு. கார்த்திகா, அவரது கணவரும் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக. சந்திரகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இசை. மதிவாணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்குப் பதிவு செய்து, தங்கள் கட்சி நிர்வாகிகளைத் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தக் கைதுகளையும், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் கண்டித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிவுறுத்தலின்படி, வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறவுள்ள இந்தப் போராட்டங்களில், அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய பசுமை அமோனியா உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவாகும் புதிய திட்டம்!

...

arvoshan.com

ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இந்திய நிதி ஆலோசகர் உயிரிழப்பு! இணையத் துன்புறுத்தல் குறித்து விசாரணை

...

arvoshan.com

ஆறு மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை? – இந்தியா புதிய முன்மொழிவு

...

arvoshan.com

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார்: திமுக பெண் கவுன்சிலருக்கு காவல்துறை சம்மன்

...

arvoshan.com

தாராபுரம் தொகுதிக்கு ரூ.1,439 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்! – முதல்வர் விஜய் அறிவிப்பு

...

arvoshan.com

நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச் சூடு – நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது!

...

arvoshan.com

டெல்லியில் ராவணன் உருவ பொம்மையுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி பொம்மையும் எரிக்கத் திட்டம்!

...

arvoshan.com

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார் – வயது 75

...

arvoshan.com

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்! விஜய்யின் TVK கட்சி நிர்வாகி இந்தியாவில் கைது

...

arvoshan.com

கோவையில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு! 10 கி.மீ. ரோடு ஷோவில் திரண்ட பெண்கள்

...

arvoshan.com

தாய் நோயிலிருந்து குணமடைந்ததால் நேர்த்திக்கடன்: 12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கும் ஓடிச் செல்லும் பிஹார் இளைஞர்!

...

arvoshan.com

“இடைத்தேர்தலில் பணம் கொடுக்காமல் வெற்றி” – தமிழக வெற்றிக் கழகத்துக்கு அண்ணாமலை பாராட்டு!

...

arvoshan.com

செல்போன் திருட முயன்றவர்... ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய பரபரப்புக் காட்சி!

...

arvoshan.com

பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்யின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

...

arvoshan.com

கணவரைக் கொலை செய்து நீல டிரம்மில் மறைத்த வழக்கு: மனைவி, காதலருக்கு மரண தண்டனை!

...