கோவையில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு! 10 கி.மீ. ரோடு ஷோவில் திரண்ட பெண்கள்

arvloshan.com

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக கோவை மாநகருக்கு வருகை தந்த முதல்வர் விஜய்க்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை விமான நிலையத்திலிருந்து காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகம் நூலகம் வரை சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நடைபெற்ற ரோடு ஷோவில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.

காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தைத் திறந்து வைப்பதற்காக, முதல்வர் விஜய் இன்று (ஒக்டோபர் 16) சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார்.

முதல்வரான பின்னர் கோவைக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் என்பதால், விமான நிலையம் முதல் காந்திபுரம் வரையிலான வீதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வீதிகளின் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், பெருமளவிலான பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முதல்வர் விஜய்யை விமான நிலையத்தில் அமைச்சர்களான ஆனந்த், சம்பத் குமார், விக்னேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ரம்யா பாரதி ஆகியோரும் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

ரசிகரை அடையாளம் கண்டு அழைத்துப் பேசிய விஜய்

விமான நிலையத்திலிருந்து முதல்வரின் வாகனம் வெளியேறியபோது, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவரை அடையாளம் கண்ட விஜய், அவரை அழைத்து சுமார் ஒரு நிமிடம் பேசினார்.

இதுகுறித்து ரெங்கராஜ் தெரிவிக்கையில், தான் மேட்டுப்பாளையம் விஜய் மன்றத்தின் நகரத் தலைவராகப் பணியாற்றியதாகவும், கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சிலர் தன்னை ஓரங்கட்டிவிட்டதாகவும் விஜய்யிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த விஜய், “இதனை இங்கு பேச வேண்டாம். சென்னையில் பேசிக்கொள்ளலாம். கட்சியினர் உங்களைத் தொடர்புகொள்வார்கள்” எனத் தெரிவித்ததாக ரெங்கராஜ் குறிப்பிட்டார்.

மேலும், 1996ஆம் ஆண்டு முதல் விஜய்க்குத் தன்னையும் தனது குடும்பத்தினரையும் நன்றாகத் தெரியும் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக அவரைச் சந்திக்க முடியாமல் இருந்ததாகவும் தெரிவித்தார். தன்னை அடையாளம் கண்டு அழைத்துப் பேசியது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.

பெண்களின் பெருமளவிலான பங்கேற்பு

விமான நிலையத்திலிருந்து ரோடு ஷோவைத் தொடங்கிய முதல்வர் விஜய்க்கு, விமான நிலையம் - காந்திபுரம் வீதியின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆண்களைவிடப் பெண்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஹோப்ஸ் கல்லூரி பேருந்து நிறுத்தத்தைக் கடந்தபோது, விஜய் தனது வாகனத்தின் மேற்பகுதிக்கு ஏறி நின்று, வழியெங்கும் திரண்டிருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். இதன்போது, ரசிகர்கள் விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி வரவேற்பு தெரிவித்ததுடன், கட்சித் துண்டுகளையும் அவர் மீது வீசினர்.

காந்திபுரம் பகுதியில் தனியார் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் முதல்வர் விஜய்க்கு வரவேற்பளித்தனர்.

கூட்ட நெரிசலில் மூவர் மயக்கம்

காந்திபுரம் பகுதியில் பெரியார் அறிவுலகம் வளைவு அருகே பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருமளவில் திரண்டிருந்ததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதன்போது மூவர் மயக்கமடைந்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களுக்கு முதலுதவி அளித்து, பின்னர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்தலில் பிரசாரம் செய்யாமலேயே ஆறு தொகுதிகளில் வெற்றி

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கோவை மாவட்டத்தில் விஜய் நேரடியாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இருப்பினும், கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆறு தொகுதிகளைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கைப்பற்றியிருந்தது.

தேர்தல் காலத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பெருமாநல்லூர் மற்றும் தாராபுரம் பகுதிகளுக்குச் சென்றபோதும், விஜய் கோவை விமான நிலையம் வழியாகவே பயணித்திருந்தார். அதன்பின்னர் கோவை மாநகருக்குள் அவர் வருகை தரவில்லை.

இந்நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாகக் கோவைக்கு விஜய் வருகை தந்துள்ளதுடன், அவரது 10 கிலோமீற்றர் ரோடு ஷோவும் பெரும் மக்கள் வரவேற்புடன் இடம்பெற்றுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தாய் நோயிலிருந்து குணமடைந்ததால் நேர்த்திக்கடன்: 12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கும் ஓடிச் செல்லும் பிஹார் இளைஞர்!

...

arvoshan.com

“இடைத்தேர்தலில் பணம் கொடுக்காமல் வெற்றி” – தமிழக வெற்றிக் கழகத்துக்கு அண்ணாமலை பாராட்டு!

...

arvoshan.com

செல்போன் திருட முயன்றவர்... ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய பரபரப்புக் காட்சி!

...

arvoshan.com

பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்யின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

...

arvoshan.com

கணவரைக் கொலை செய்து நீல டிரம்மில் மறைத்த வழக்கு: மனைவி, காதலருக்கு மரண தண்டனை!

...

arvoshan.com

முதல்வர் விஜய்க்கு சால்வை: கொச்சைப்படுத்த வேண்டாம் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

...

arvoshan.com

ஹார்முஸ் நீரிணையில் பெரும் விபத்து: கடல் வெடிமருந்தில் மோதி கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற மாபெரும் கப்பல் தீப்பற்றி எரிந்தது

...

arvoshan.com

உச்ச நீதிமன்றத்தை நோக்கி இண்டியா கூட்டணி பேரணி: ராகுல், நேஹா உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

...

arvoshan.com

“இந்தியாவின் முதலாளி அம்பானியா?”: எலான் மஸ்க் கேள்வி

...

arvoshan.com

தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக அபார வெற்றி!

...

arvoshan.com

"இந்தியாவிற்கு வருக எலோன், மற்றவரை சந்திக்கும் வரை காத்திருங்கள்": ராகுல் காந்தி கருத்து!

...

arvoshan.com

இந்தியத் திரைத்துறையின் சிரேஷ்ட நடிகரான நானா படேக்கர் மாரடைப்பால் காலமானார்

...

arvoshan.com

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு வீழ்ச்சி; 9இல் வாக்கு எண்ணிக்கை!

...

arvoshan.com

2023க்குப் பின்னரான அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய பிரகாஷ் ராஜ் கோரிக்கை

...

arvoshan.com

இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக புதிய பயங்கரவாத அலை: இஸ்ரேலிய தூதர் எச்சரிக்கை!

...