கணவரைக் கொலை செய்து நீல டிரம்மில் மறைத்த வழக்கு: மனைவி, காதலருக்கு மரண தண்டனை!

arvloshan.com

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், கணவரைக் கொலை செய்து அவரது உடலை நீல நிற டிரம்மில் மறைத்த வழக்கில், மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலர் சஹில் சுக்லா ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மீரட்டைச் சேர்ந்த சௌரவ் ராஜ்புத் என்பவரின் மனைவி முஸ்கான் ரஸ்தோகி, சஹில் சுக்லா என்பவருடன் காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உறவுக்குத் தடையாக இருந்த சௌரவைக் கொலை செய்ய இருவரும் திட்டமிட்டதாக வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2025 மார்ச் மாதம் சௌரவைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இருவரும், அவரது உடலை நீல நிற டிரம்மில் இட்டு, அதில் சிமெண்ட் கலவை மற்றும் மணலை நிரப்பி மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் உள்ளிட்ட தடயங்களை மறைத்துவிட்டு, இருவரும் இமாச்சலப் பிரதேசத்துக்குத் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மீரட் பொலிஸார், முஸ்கான் மற்றும் சஹில் ஆகியோரைக் கைது செய்தனர்.

நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு

நீண்டகால விசாரணைக்குப் பின்னர், கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி, சௌரவைக் கொலை செய்தமை மற்றும் குற்றத்தை மறைத்தமை தொடர்பான வழக்கில் முஸ்கான், சஹில் ஆகிய இருவரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீரட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் மிஷ்ரா, இருவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். தண்டனை அறிவிப்பின்போது, மகாபாரதத்தை மேற்கோள் காட்டிய நீதிபதி, “தண்டனை என்பது தர்மம்” எனக் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகள் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தண்டனை அறிவிக்கப்பட்டபோது, சௌரவின் தாயாரும் சகோதரரும் நீதிமன்றத்தில் இருந்தனர். தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே சிலர் “பாரத் மாதா கி ஜே” என முழக்கமிட்டனர்.

“என் மகன் என்றும் என் நினைவில் வாழ்வான்”

தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய சௌரவின் தாயார், தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் பிரிந்து வாழலாம் என்றும், அதற்காக வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.

“ஒருவருடன் வாழப் பிடிக்கவில்லை என்றால் அவரைப் பிரிந்து அவரவர் வழியில் வாழலாம். அதற்காக இன்னொருவரின் பிள்ளையைக் கொலை செய்யக்கூடாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை என் மகன் இறக்கவில்லை; என் மனதில் என்றும் நினைவுகளாக வாழ்வான்” என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், முஸ்கானின் பெற்றோர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அதில், தமது மகள் செய்த குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அதனை எதிர்க்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்யின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

...

arvoshan.com

முதல்வர் விஜய்க்கு சால்வை: கொச்சைப்படுத்த வேண்டாம் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

...

arvoshan.com

ஹார்முஸ் நீரிணையில் பெரும் விபத்து: கடல் வெடிமருந்தில் மோதி கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற மாபெரும் கப்பல் தீப்பற்றி எரிந்தது

...

arvoshan.com

உச்ச நீதிமன்றத்தை நோக்கி இண்டியா கூட்டணி பேரணி: ராகுல், நேஹா உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

...

arvoshan.com

“இந்தியாவின் முதலாளி அம்பானியா?”: எலான் மஸ்க் கேள்வி

...

arvoshan.com

தாராபுரம், மதுராந்தகத்தில் தவெக அபார வெற்றி!

...

arvoshan.com

"இந்தியாவிற்கு வருக எலோன், மற்றவரை சந்திக்கும் வரை காத்திருங்கள்": ராகுல் காந்தி கருத்து!

...

arvoshan.com

இந்தியத் திரைத்துறையின் சிரேஷ்ட நடிகரான நானா படேக்கர் மாரடைப்பால் காலமானார்

...

arvoshan.com

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு வீழ்ச்சி; 9இல் வாக்கு எண்ணிக்கை!

...

arvoshan.com

2023க்குப் பின்னரான அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய பிரகாஷ் ராஜ் கோரிக்கை

...

arvoshan.com

இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக புதிய பயங்கரவாத அலை: இஸ்ரேலிய தூதர் எச்சரிக்கை!

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் கேரளப் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!

...

arvoshan.com

இந்தியாவின் அணுஆயுத இருப்பு 190 ஆக அதிகரிப்பு: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

...

arvoshan.com

சாலை வசதியில்லை: கர்ப்பிணியை 8 கி.மீ. தூளியில் சுமந்து சென்ற உறவினர்கள்!

...

arvoshan.com

தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?: மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் விஜய் கடும் கண்டனம்

...