ஆறு மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை? – இந்தியா புதிய முன்மொழிவு

arvloshan.com

ஆறு மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் குறிப்பிட்ட வகை சர்க்கரைகளைச் சேர்ப்பதைத் தடை செய்ய இந்தியா முன்மொழிந்துள்ளது.

குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் (Sucrose) மற்றும் பிரக்டோஸ் (Fructose) ஆகிய சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதைத் தடை செய்வதற்கான வரைவு விதிமுறைகளை ஆணையம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி இந்திய அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த முன்மொழிவு, குழந்தைப் பருவத்தின் ஆரம்பகட்டத்தில் தேவையற்ற முறையில் சேர்க்கப்படும் சர்க்கரைகளுக்கு குழந்தைகள் உள்ளாகுவதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி, கார்போஹைட்ரேட் மூலங்களாகத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட அளவுகளில் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகியவற்றைச் சேர்க்க உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் இந்தச் சர்க்கரை வகைகளைச் சேர்ப்பது முற்றாகத் தடை செய்யப்படும்.

சிறு வயதிலேயே சர்க்கரையை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய உடல் பருமன் உள்ளிட்ட சுகாதாரப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் உரிய ஊட்டச்சத்து தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலை மாத்திரம் வழங்க வேண்டும் என்ற பொது சுகாதாரப் பரிந்துரைகளுக்கும் இந்த முன்மொழிவு ஆதரவளிப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வரைவு விதிமுறைகள் தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகள், ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தடை தொடர்பான விதிமுறைகள் இறுதிப்படுத்தப்பட்டு உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பின்னரே அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய பசுமை அமோனியா உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவாகும் புதிய திட்டம்!

...

arvoshan.com

நிர்வாகிகள் கைது: தவெக அரசைக் கண்டித்து அக். 24-ல் நாதக மாநிலம் தழுவிய போராட்டம்!

...

arvoshan.com

ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இந்திய நிதி ஆலோசகர் உயிரிழப்பு! இணையத் துன்புறுத்தல் குறித்து விசாரணை

...

arvoshan.com

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார்: திமுக பெண் கவுன்சிலருக்கு காவல்துறை சம்மன்

...

arvoshan.com

தாராபுரம் தொகுதிக்கு ரூ.1,439 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்! – முதல்வர் விஜய் அறிவிப்பு

...

arvoshan.com

நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச் சூடு – நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது!

...

arvoshan.com

டெல்லியில் ராவணன் உருவ பொம்மையுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி பொம்மையும் எரிக்கத் திட்டம்!

...

arvoshan.com

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார் – வயது 75

...

arvoshan.com

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்! விஜய்யின் TVK கட்சி நிர்வாகி இந்தியாவில் கைது

...

arvoshan.com

கோவையில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு! 10 கி.மீ. ரோடு ஷோவில் திரண்ட பெண்கள்

...

arvoshan.com

தாய் நோயிலிருந்து குணமடைந்ததால் நேர்த்திக்கடன்: 12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கும் ஓடிச் செல்லும் பிஹார் இளைஞர்!

...

arvoshan.com

“இடைத்தேர்தலில் பணம் கொடுக்காமல் வெற்றி” – தமிழக வெற்றிக் கழகத்துக்கு அண்ணாமலை பாராட்டு!

...

arvoshan.com

செல்போன் திருட முயன்றவர்... ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய பரபரப்புக் காட்சி!

...

arvoshan.com

பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்யின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

...

arvoshan.com

கணவரைக் கொலை செய்து நீல டிரம்மில் மறைத்த வழக்கு: மனைவி, காதலருக்கு மரண தண்டனை!

...