கொழும்பில் மும்மொழிப் பாடசாலை ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானம்

arvloshan.com

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலக் கல்வி வசதிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், மும்மொழிப் பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நவம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட கல்வி உபகுழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளின் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் இடைநடுவில் கல்வியைத் தொடர்வதை நிறுத்துவதுடன், பாடசாலை வருகையும் குறைவடைந்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்குத் தீர்வாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தமிழ் மொழிமூல வகுப்புகளை ஆரம்பிப்பதுடன், எதிர்காலத்தில் மும்மொழிப் பாடசாலை ஒன்றை நிறுவவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிள்ளையும் தனது தாய்மொழியில் கல்வி கற்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்காக 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நடைமுறையில் உள்ள பாடசாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் ஒன்றிணைக்கப்படும் சந்தர்ப்பங்களில், மாணவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான போஷாக்கு உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சில பகுதிகளில் மாணவர்களின் பாடசாலை வருகை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத நிலையில் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்காக பிரதேச செயலகங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து நடமாடும் சேவைகளை முன்னெடுக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், மேல் மாகாணத்தில் பாடசாலை அதிபர்களுக்கான இடமாற்றங்களை ஒழுங்குபடுத்தும் புதிய கொள்கைக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 2027ஆம் ஆண்டு முதல் அதிபர்களுக்கான இடமாற்றங்களை முறைப்படுத்தப்பட்ட வகையில் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமித்தல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு செயன்முறைப் பயிற்சிக் கருவிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்களும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு ஆசிரியர் பயிற்சித் திட்டங்களில் மாணவர்களை மையப்படுத்திய கற்பித்தல் முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பல பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

யாழ்ப்பாணம் கொட்டடிக் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு

...

arvoshan.com

கிழக்கில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: பிள்ளையானின் விளக்கமறியல் டிசம்பர் 07ஆம் திகதி வரை நீடிப்பு!

...

arvoshan.com

ஹங்குரன்கெத்த மெரிகோல்ட் தோட்டத்தில் ஆபத்தான நிலையில் லயன் குடியிருப்புகள் – அச்சத்தில் வாழும் மக்கள்!

...

arvoshan.com

பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை அதிகரிக்கப் போவதில்லை – உற்பத்தியாளர்கள் உறுதி

...

arvoshan.com

2026ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் வீதி விபத்துகளில் 2,463 பேர் உயிரிழப்பு – பொலிஸார்

...

arvoshan.com

ஒக்டோபரில் இலங்கையின் பணவீக்கம் 8.5 சதவீதமாக அதிகரிப்பு

...

arvoshan.com

இலங்கையின் முதல் பெண் அமெரிக்கத் தூதராக அருணி ரணராஜா நியமனம்

...

arvoshan.com

அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்!

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டத்தில் ரூ.2 டிரில்லியன் மூலதனச் செலவினம்!

...

arvoshan.com

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 1,193 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

...

arvoshan.com

சிங்கராஜ வனப்பகுதியில் வனவிலங்குகளைச் சேகரித்த குற்றச்சாட்டு: நான்கு சீனப் பிரஜைகளுக்கு 7.64 கோடி ரூபா அபராதம்

...

arvoshan.com

இந்தியாவின் சீரற்ற காலநிலையால் சில இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் – அமைச்சர் எச்சரிக்கை

...

arvoshan.com

வெளிவிவகார அமைச்சில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியம் போலியானதா? – ஹர்ஷ டி சில்வா கேள்வி

...

arvoshan.com

சீனாவுடன் அறிவிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் முதலீடு எங்கே? – அரசாங்கத்திடம் நாமல் ராஜபக்ஷ கேள்வி

...

arvoshan.com

இலங்கையில் தொழிலாளர் சட்டங்களில் பாரிய திருத்தங்கள் – வேலை நேரம், மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களில் புதிய ஏற்பாடுகள்

...