கல்விச் சபையை அமைக்க ஓராண்டுக்குள் புதிய சட்டமூலம்: பிரதமர் ஹரிணி

arvloshan.com

இலங்கையின் கல்வித்துறையில் தரம், தரப்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில், புதிய "கல்விச் சபை" ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் ஓராண்டு காலத்திற்குள் தயாரித்து முடிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பத்மசிரி பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவொன்றின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்தச் சபை நிறுவப்படவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார.

இதற்கான சட்டமூலத்தை வரைவதற்கு கடந்த 2026 ஆகஸ்ட் 25 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, அரசியலமைப்பு மற்றும் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக, குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை சட்ட வரைஞருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கல்விச் சபையின் முக்கிய பணிகள்:

முன்பள்ளி (Pre-school), முதன்மை (Primary) மற்றும் இரண்டாம் நிலைக் கல்விப் பிரிவுகளில் பணியாற்றும் கல்விச் சமூகத்தினரின் தொழில்முறை வளர்ச்சி, தரப்படுத்துதல், பதிவுசெய்தல், ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.

இருமொழிப் பயன்பாட்டை விரிவாக்குதல் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வல்லுநர்களை உருவாக்குதல் தொடர்பாகக் கல்வி அமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்குதல்.

ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் தொழில்முறை பயிற்சித் திட்டங்களுக்கான தகுதிகளைத் தரப்படுத்துதல்.

கல்விச் சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் குறைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு இடைத்தரகராகச் செயற்படுதல்.

அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்ய உறுதுணையாக இருத்தல்.

ஆசிரியர்களுக்கு தொழில்முறை உரிமம்:

இச்சீர்திருத்தங்களின் கீழ் ஆசிரியர்களுக்குத் தொழில்முறை உரிமம் மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, குறிப்பிட்ட தகுதிநிலைகள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தகுதியுடைய ஆசிரியர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும்.

மருத்துவம், சட்டத்துறை போன்று ஆசிரியர் தொழிலும் கௌரவமிக்க தொழிலாக மாற்றப்படுவதை இது உறுதி செய்யும் என்றும், ஆசிரியர்கள் திறம்படப் பணியாற்றுவதற்குத் தேவையான பாடசாலை மற்றும் வகுப்பறை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

அதேவேளை, இந்தப் புதிய கல்விச் சபையானது அரச மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களையோ அல்லது அவற்றின் கல்வியியல் திட்டங்களின் தரத்தையோ ஒழுங்குபடுத்தாது என்றும், பொதுக் கல்வி அமைப்பின் தரத்தை உயர்த்துவதில் மட்டுமே இது கவனம் செலுத்தும் என்றும் பிரதமர் மேலும் தெளிவுபடுத்தினார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாடீர மீண்டும் சேவையில் இணைப்பு!

...

arvoshan.com

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமைக்கு மகாநாயக்க தேரர்கள் கடும் கவலை!

...

arvoshan.com

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 211,666 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் பயணம்

...

arvoshan.com

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் பிணையில் விடுதலை!

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ஷ அக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

1,540 கிராம நிலதாரி அதிகாரிகளுக்கு நாளை நியமனக் கடிதங்கள் வழங்கல்

...

arvoshan.com

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம வழக்கு முடியும் வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

கைது செய்யப்பட்ட சிரந்தி ராஜபக்‌ஷ நீதிமன்றில் முன்னிலை

...

arvoshan.com

விமல், கம்மன்பில, திலீத் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு

...

arvoshan.com

பேங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோவுக்கும் அதிகமான 'குஷ்' போதைப்பொருளுடன் 24 வயது இளைஞர் கைது

...

arvoshan.com

சிராந்தி ராஜபக்‌ஷ கைது: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை நிதி மோசடி விபரம் வெளியானது!

...

arvoshan.com

கட்டாய SLS தரச்சான்று இன்றி மின் உபகரணங்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

...

arvoshan.com

வெலிகம துப்பாக்கிச்சூடு: தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: அனோஜன் தாக்கப்பட்டமை குறித்து அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்

...

arvoshan.com

சவூதி மன்னிப்பைச் சுட்டிக்காட்டி நாமல் சாடல்; ஞாணசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக் கோரிக்கை

...