ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்டிய சந்திரிகா – அரசாங்கம் வர்க்க வெறுப்பைத் தூண்டுவதாகக் குற்றச்சாட்டு

arvloshan.com

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஊழல் ஒழிப்பைத் தவிர அரசாங்கத்திடம் வேறு கொள்கைகள் எதுவும் இல்லை என விமர்சித்துள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரியின் Equality Initiative அமைப்பினால் வெளியிடப்பட்ட VORTEX ஐந்தாவது தொகுதியின் அறிமுக நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை சிறப்பானது எனக் குறிப்பிட்ட அவர், அதனைத் தவிர வேறு எந்தவொரு கொள்கையையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு வர்க்கத்தினருக்கு எதிராக மற்றொரு வர்க்கத்தினரிடையே வெறுப்புணர்வைத் தொடர்ந்து வளர்ப்பதைத் தவிர அரசாங்கத்திடம் வேறு எதுவும் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் இளைஞர்கள் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ தலைமைத்துவத்தை வழங்கும் வரை இளைஞர்கள் காத்திருக்கக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் இருப்பவர்களுக்காகக் காத்திருக்காமல் இளைஞர்களே முன்வந்து தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை இயற்கை வளங்கள் நிறைந்த நாடாக இருந்தபோதிலும், அவற்றில் பெரும்பாலானவை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய சந்திரிகா, கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகள் மூலம் உயர்ந்த மனித வளத்தையும் நாடு கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும், உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுவதற்கு, நாட்டில் உண்மையான தேசிய ஒற்றுமையை உருவாக்க முடியாமையே முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னைய நாடாளுமன்றத்தில் சுமார் 20 உறுப்பினர்கள் மாத்திரமே பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்ததாகவும், பெரும்பாலான உறுப்பினர்கள் உயர்தரப் பரீட்சையைக்கூட நிறைவு செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத்திரமன்றி, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், சமத்துவமின்மையே இலங்கை உண்மையான முன்னேற்றத்தையும் சிறப்பையும் அடைவதற்குத் தடையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

...

arvoshan.com

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – இலங்கை வலியுறுத்தல்

...

arvoshan.com

பெண்ணைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர் மீது காட்டு யானை தாக்குதல்!

...

arvoshan.com

தென் கொரியாவில் லொறியிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த மரப்பொருள் தாக்கி இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு

...

arvoshan.com

போதைப்பொருள் கடத்தலில் சந்தேகிக்கப்படும் கப்பல் கடற்படையினரால் முற்றுகை – 7 வெளிநாட்டவர்கள் கைது!

...

arvoshan.com

டித்வா புயலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பதுளையில் பிரதமர் தலைமையில் விசேட நிகழ்வு

...

arvoshan.com

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

...

arvoshan.com

வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு இலங்கை திரும்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஆராய்கிறது அரசாங்கம்

...

arvoshan.com

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக விவசாயிகளுக்கு அவுஸ்திரேலியா, ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு உதவி!

...

arvoshan.com

தனித்தனி வீதி விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

...

arvoshan.com

இணைய வங்கி மோசடி: ஒரு மில்லியன் ரூபாய் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் தனியார் நிறுவன ஊழியர் கைது!

...

arvoshan.com

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு முற்றுகை – 7 பேர் கைது!

...

arvoshan.com

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பம்!

...

arvoshan.com

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு

...

arvoshan.com

மாத்தறை சார்க் கலாசார நிலையத்தை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டம்

...