இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

arvloshan.com

இலங்கையின் ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நவம்பர் 27ஆம் திகதி இரவு 9 மணி முதல் நவம்பர் 28ஆம் திகதி இரவு 9 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேசத்திற்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நிள்தண்டஹின்ன மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேசங்களுக்கும் இரண்டாம் நிலை (செம்மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழைவீழ்ச்சி மற்றும் எதிர்வரும் காலநிலை முன்னறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மண்சரிவு, மலைச்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல், வெட்டப்பட்ட மண் சரிவுகள் இடிந்து விழுதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், கனமழை தொடரும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நிலத்தில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்தல், கட்டடங்களில் விரிசல்கள் தோன்றுதல், நீரோட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுதல் மற்றும் நீரூற்றுகள் திடீரென தோன்றுதல் அல்லது மறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவதானம் செலுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எனினும், தற்போதைய அறிவிப்பில் மூன்றாம் நிலை (சிவப்பு) வெளியேற்ற எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்டிய சந்திரிகா – அரசாங்கம் வர்க்க வெறுப்பைத் தூண்டுவதாகக் குற்றச்சாட்டு

...

arvoshan.com

இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – இலங்கை வலியுறுத்தல்

...

arvoshan.com

பெண்ணைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர் மீது காட்டு யானை தாக்குதல்!

...

arvoshan.com

தென் கொரியாவில் லொறியிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த மரப்பொருள் தாக்கி இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு

...

arvoshan.com

போதைப்பொருள் கடத்தலில் சந்தேகிக்கப்படும் கப்பல் கடற்படையினரால் முற்றுகை – 7 வெளிநாட்டவர்கள் கைது!

...

arvoshan.com

டித்வா புயலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பதுளையில் பிரதமர் தலைமையில் விசேட நிகழ்வு

...

arvoshan.com

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

...

arvoshan.com

வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு இலங்கை திரும்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஆராய்கிறது அரசாங்கம்

...

arvoshan.com

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக விவசாயிகளுக்கு அவுஸ்திரேலியா, ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு உதவி!

...

arvoshan.com

தனித்தனி வீதி விபத்துகளில் சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

...

arvoshan.com

இணைய வங்கி மோசடி: ஒரு மில்லியன் ரூபாய் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் தனியார் நிறுவன ஊழியர் கைது!

...

arvoshan.com

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு முற்றுகை – 7 பேர் கைது!

...

arvoshan.com

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பம்!

...

arvoshan.com

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு

...

arvoshan.com

மாத்தறை சார்க் கலாசார நிலையத்தை சமுத்திரப் பல்கலைக்கழகத்தின் கீழ் அபிவிருத்தி செய்யத் திட்டம்

...