இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களுக்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

arvloshan.com

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டங்களைத் திரும்பப் பெறுமாறும் கோரி, இலங்கையர்களின் குழுவொன்று பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரித்தானியக் கிளையும், சமூக நீதிக்கான மக்கள் இயக்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

இதில் இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியதுடன், அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் (POCA) ஆகியவற்றுக்கும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

குறித்த சட்டங்கள் ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கக்கூடியவை எனச் சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவை இலங்கையின் அடிப்படை உரிமைகள், சிவில் சுதந்திரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் கவலை வெளியிட்டனர்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலங்கள் தொடர்பாக மனித உரிமைகள் அமைப்புகள் பல்வேறு கவலைகளை முன்வைத்து வரும் பின்னணியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக, ஒருவரைத் தடுத்து வைக்கும் அதிகாரங்கள், கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக ஏற்கனவே விமர்சனம் வெளியிட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch), தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த அதிகாரங்களைப் புதிய சட்டமூலமும் தொடர்ந்து கொண்டிருக்கக்கூடும் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

கேப்பாபிலவு நிலமீட்புப் போராட்டக் கொட்டகைக்கு தீ வைப்பு – மர்ம நபர்கள் குறித்து விசாரணை கோரிக்கை

...

arvoshan.com

ABU மாநாட்டை நடத்துவதன் மூலம் ரூ.250 மில்லியன் பெறுமதியான விளம்பர வாய்ப்பு – இலங்கை சுற்றுலாத்துறை

...

arvoshan.com

மகா பருவத்துக்குத் தேவையான உரம் போதியளவில் கையிருப்பில் – தேசிய உரச் செயலகம் அறிவிப்பு

...

arvoshan.com

PickMe Food, Uber Eats சேவைகளை நம்பி அனைவராலும் வாழ முடியாது – எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்திடம் ஹர்ஷா கேள்வி

...

arvoshan.com

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு – நிதி அமைச்சு அறிவிப்பு

...

arvoshan.com

TIN சான்றிதழுக்காக வருமான வரி அலுவலகங்களுக்கு தேவையின்றி வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

...

arvoshan.com

ஓய்வுபெறும் முப்படையினருக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டம்

...

arvoshan.com

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோருக்கு புதிய நீதிமன்றத் திகதி அறிவிப்பு

...

arvoshan.com

சபரகமுவ மாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய 40 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி!

...

arvoshan.com

தும்பர சிறைச்சாலையில் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: புதிய தகவல்கள் வெளியாகின – உறவினர்கள் நீதிகோரி கோரிக்கை

...

arvoshan.com

கெக்கிராவையில் சட்டவிரோத துப்பாக்கிகள், வனவிலங்கு பொருட்களுடன் மூவர் கைது!

...

arvoshan.com

சவூதியில் இலங்கைப் பிரஜைக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்தானமை: ஜனாதிபதி அநுரவுக்கு மியன்மார் அமைப்பு பாராட்டு

...

arvoshan.com

யானைகளைப் பாதுகாக்கவும் – மனித - யானை மோதல்களைக் குறைக்கவும் நாடளாவிய நடவடிக்கை ஆரம்பம்!

...

arvoshan.com

மெல்பேர்ன் – கொழும்பு விமானத்தில் அவசரநிலை அறிவிப்பு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விளக்கம்

...

arvoshan.com

ரூ. 79 இலட்சம் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது!

...