வாகன வருமான உரிமப் பத்திரம் பெறுவதற்கு நவம்பர் 1 முதல் TIN சான்றிதழ் கட்டாயம்!

arvloshan.com

இலங்கை முழுவதும் வாகன வருமான உரிமப் பத்திரங்களைப் (Revenue Licence) புதிதாகப் பெற்றுக்கொள்வதற்கும், புதுப்பிப்பதற்கும் 2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழான (TIN Certificate) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் விசேட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஒக்டோபர் 29ஆம் திகதியிடப்பட்ட இந்தச் சுற்றறிக்கையில், வாகன வருமான உரிமப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் புதுப்பிப்பதற்கும் விண்ணப்பிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி வெளியிட்ட SEC/2026/E/07 இலக்கச் சுற்றறிக்கைக்கு அமையவும், 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையிலும் இந்தக் கட்டாய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வாகனத்தின் அசல் பதிவுச் சான்றிதழை (CR) சமர்ப்பித்து வருமான உரிமப் பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது TIN சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேவேளை, வாகன உரிமை மாற்றத்திற்காக MTA 11 மற்றும் CMT 52 ஆகிய படிவங்களைச் சமர்ப்பிப்பவர்கள், CMT 52 படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபரின் TIN சான்றிதழை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், TIN சான்றிதழ்களின் அச்சுப் பிரதிகள் மாத்திரமன்றி, இலத்திரனியல் பிரதிகள் மற்றும் திரை நகல்களையும் (Screen Printouts) ஏற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும் TIN தொடர்பான தகவல்களை முறையாகப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சில தரப்பினருக்கு இந்த TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குக் குறைந்தவர்கள், இலங்கையில் 183 நாட்களுக்கும் குறைவாகத் தங்கியுள்ள தகுதியுடைய வெளிநாட்டவர்கள், TIN பதிவுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், இராஜதந்திரச் சலுகைகளைப் பெறுபவர்கள் மற்றும் தனிநபர்கள் அல்லாத நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த விலக்கு பொருந்தும் எனச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன வருமான உரிமப் பத்திரங்களைப் பெறுவதற்கான இந்தப் புதிய நடைமுறை, வாகனப் பதிவு, வங்கிக் கணக்குகளைத் திறத்தல், காணிப் பதிவு மற்றும் வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளுக்கும் TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

“எனக்கு வலிக்கிறது என்று நினைக்கிறார்களா?” – ஊசி குத்தும் சடங்குகள் குறித்து ஜனாதிபதி கேள்வி

...

arvoshan.com

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் பொதுமக்களிடம் தகவல் கோரிக்கை!

...

arvoshan.com

இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி வருமானம் 15.5% வீழ்ச்சி!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் மேலும் வரிக்குறைப்புகள் – ஜனாதிபதி அநுர குமார அறிவிப்பு!

...

arvoshan.com

காட்டு யானையைப் பிடிக்க அல்லது காயப்படுத்த பொறி வெடி வைத்த நபருக்கு ரூ. 3 இலட்சத்து 10 ஆயிரம் அபராதம்!

...

arvoshan.com

கொழும்பில் 5.96 கோடி ரூபாய் நிதி மோசடி – தனியார் நிறுவன ஊழியர் கைது!

...

arvoshan.com

மீண்டும் இலங்கைக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள்!

...

arvoshan.com

நவம்பர் 2 முதல் மீண்டும் இணையவழி முன்பதிவு முறை அமுல்!

...

arvoshan.com

திருடனைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் – திருடப்பட்ட கைப்பேசியை மீட்டார்!

...

arvoshan.com

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 51.5 சதவீதத்தால் அதிகரிப்பு – 4.5 பில்லியன் டொலரை எட்டியது

...

arvoshan.com

2026ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இலங்கையர்கள் செலவிட்ட தொகை 62% அதிகரிப்பு!

...

arvoshan.com

நாளை முதல் முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

...

arvoshan.com

ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய மின்தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகின் செயலிழப்பே காரணம் – ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை

...

arvoshan.com

வாட்ஸ்அப் ஊடாகப் பரிசுப் பொதி வழங்குவதாகக் கூறி 14.5 இலட்சம் ரூபாய் மோசடி – பெண் கைது!

...

arvoshan.com

வாகன இறக்குமதிச் செலவில் செப்டம்பரில் 34.4% வீழ்ச்சி!

...