“எனக்கு வலிக்கிறது என்று நினைக்கிறார்களா?” – ஊசி குத்தும் சடங்குகள் குறித்து ஜனாதிபதி கேள்வி

arvloshan.com

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இலக்குவைத்து களிமண் பொம்மைகளில் ஊசிகளைக் குத்தும் சடங்குகள் முன்னெடுக்கப்படுவது குறித்து ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய அறிவுஜீவிகள் அமைப்பின் (NIO) தேசிய மாநாடு நேற்று (31) சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றிய ஜனாதிபதி, சில எதிர்க்கட்சிக் குழுக்கள் முன்னெடுக்கும் விசித்திரமான போராட்ட நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார்.

கடந்தகால அரசியல் கலாசாரத்தின் மூலம் நன்மைகளைப் பெற்ற சில தரப்பினரால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்படுத்தி வரும் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, வெறுப்புப் பேச்சுகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் விசித்திரமான போராட்ட நடவடிக்கைகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

களிமண் பொம்மைகளில் ஊசிகளைக் குத்தும் சடங்குகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, களிமண் பொம்மையொன்றுக்குத் தீங்கு விளைவிப்பதால் மற்றொரு நபருக்கு வலி ஏற்படும் என எத்தகைய சிந்தனையின் அடிப்படையில் நம்புகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், ருவன்வெலிசாய தூபியை அரசாங்கம் பூமிக்குள் அமிழச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் விமர்சித்துள்ளார்.

தெளிவான நோக்கங்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் இயக்கங்களும் போராட்டங்களும் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆனால் தெளிவான இலக்குகளும் திசையும் இல்லாத குழப்பமான நடவடிக்கைகள் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.

எனவே, எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் நோக்கங்களையும் நிலைப்பாடுகளையும் தெளிவுபடுத்தி, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திசைதிருப்பப்படாது எனவும், நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் மத வழிபாடுகள் மற்றும் பல்வேறு சடங்கு நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன், ஜனாதிபதிக்கு எதிராக களிமண் பொம்மைகளைப் பயன்படுத்தி சாபமிடும் சடங்குகளும் முன்னெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் அல்லது ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

வாகன வருமான உரிமப் பத்திரம் பெறுவதற்கு நவம்பர் 1 முதல் TIN சான்றிதழ் கட்டாயம்!

...

arvoshan.com

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் பொதுமக்களிடம் தகவல் கோரிக்கை!

...

arvoshan.com

இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி வருமானம் 15.5% வீழ்ச்சி!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் மேலும் வரிக்குறைப்புகள் – ஜனாதிபதி அநுர குமார அறிவிப்பு!

...

arvoshan.com

காட்டு யானையைப் பிடிக்க அல்லது காயப்படுத்த பொறி வெடி வைத்த நபருக்கு ரூ. 3 இலட்சத்து 10 ஆயிரம் அபராதம்!

...

arvoshan.com

கொழும்பில் 5.96 கோடி ரூபாய் நிதி மோசடி – தனியார் நிறுவன ஊழியர் கைது!

...

arvoshan.com

மீண்டும் இலங்கைக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள்!

...

arvoshan.com

நவம்பர் 2 முதல் மீண்டும் இணையவழி முன்பதிவு முறை அமுல்!

...

arvoshan.com

திருடனைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் – திருடப்பட்ட கைப்பேசியை மீட்டார்!

...

arvoshan.com

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 51.5 சதவீதத்தால் அதிகரிப்பு – 4.5 பில்லியன் டொலரை எட்டியது

...

arvoshan.com

2026ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இலங்கையர்கள் செலவிட்ட தொகை 62% அதிகரிப்பு!

...

arvoshan.com

நாளை முதல் முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

...

arvoshan.com

ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய மின்தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகின் செயலிழப்பே காரணம் – ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை

...

arvoshan.com

வாட்ஸ்அப் ஊடாகப் பரிசுப் பொதி வழங்குவதாகக் கூறி 14.5 இலட்சம் ரூபாய் மோசடி – பெண் கைது!

...

arvoshan.com

வாகன இறக்குமதிச் செலவில் செப்டம்பரில் 34.4% வீழ்ச்சி!

...