2026ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இலங்கையர்கள் செலவிட்ட தொகை 62% அதிகரிப்பு!

arvloshan.com

இலங்கையர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிடும் தொகை, 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 62.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் அண்மைய வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இலங்கையர்கள் 937.2 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளனர்.

கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தச் செலவினம் 577 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

குறிப்பாக, கடந்த செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவினம் 64.9 சதவீதத்தால் அதிகரித்து 122 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இந்தத் தொகை 74 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவின அதிகரிப்பு, சேவைகள் துறையின் வெளிச்செலவுகளிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, 2026 செப்டெம்பர் மாதத்தில் சேவைகள் துறையின் மொத்த வெளிச்செலவுகள் 36.7 சதவீதத்தால் அதிகரித்து 440.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்தத் தொகை 322.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இதன் காரணமாக, செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் சேவைகள் கணக்கின் உபரி 34.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 119 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.

அதேவேளை, 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான ஒட்டுமொத்த சேவைகள் கணக்கின் உபரியும் 22.3 சதவீதத்தால் குறைந்து 2.21 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகளுக்கான கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளமை, சேவைகள் துறையின் வருமான அதிகரிப்பை விட வேகமாகச் செலவுகள் உயர்ந்துள்ளமை ஆகியவையே இந்த உபரி வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் மேலும் வரிக்குறைப்புகள் – ஜனாதிபதி அநுர குமார அறிவிப்பு!

...

arvoshan.com

காட்டு யானையைப் பிடிக்க அல்லது காயப்படுத்த பொறி வெடி வைத்த நபருக்கு ரூ. 3 இலட்சத்து 10 ஆயிரம் அபராதம்!

...

arvoshan.com

கொழும்பில் 5.96 கோடி ரூபாய் நிதி மோசடி – தனியார் நிறுவன ஊழியர் கைது!

...

arvoshan.com

மீண்டும் இலங்கைக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள்!

...

arvoshan.com

நவம்பர் 2 முதல் மீண்டும் இணையவழி முன்பதிவு முறை அமுல்!

...

arvoshan.com

திருடனைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் – திருடப்பட்ட கைப்பேசியை மீட்டார்!

...

arvoshan.com

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 51.5 சதவீதத்தால் அதிகரிப்பு – 4.5 பில்லியன் டொலரை எட்டியது

...

arvoshan.com

நாளை முதல் முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

...

arvoshan.com

ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய மின்தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகின் செயலிழப்பே காரணம் – ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை

...

arvoshan.com

வாட்ஸ்அப் ஊடாகப் பரிசுப் பொதி வழங்குவதாகக் கூறி 14.5 இலட்சம் ரூபாய் மோசடி – பெண் கைது!

...

arvoshan.com

வாகன இறக்குமதிச் செலவில் செப்டம்பரில் 34.4% வீழ்ச்சி!

...

arvoshan.com

நிறுவனங்களுக்கு இறுதி எச்சரிக்கை – ஒரு மில்லியன் ரூபா அபராதம், 10 ஆண்டுகள் சிறை!

...

arvoshan.com

பொதுநலவாய உச்சி மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கும் பிரதமர் ஹரிணி!

...

arvoshan.com

தங்கத்தைப் பறிக்க வர்த்தகரை சித்திரவதை செய்த பொலிஸார் – மூன்று அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

...

arvoshan.com

அகதியாக 7 வயதில் தமிழகம் வந்த இலங்கை இளைஞர் – 30 ஆண்டுகளாக அடையாளம் தேடும் அவலம்!

...