பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் பொதுமக்களிடம் தகவல் கோரிக்கை!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படாமல் தற்போது வீதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொது அறிவித்தலில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பதிவுகளில் இடம்பெறாத நிலையில் பயன்படுத்தப்பட்டு வரும் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் அல்லது அவ்வாறான மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் தகவல்களை அறிந்தவர்கள், உரிய விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வீதிகளில் பயன்பாட்டில் உள்ள போதிலும், திணைக்களத்தின் பதிவுத் தரவுத்தளத்தில் உள்ளடக்கப்படாத மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
எனவே, இவ்வாறான மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் தகவல்களை அறிந்துள்ள பொதுமக்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைய இணைப்பின் ஊடாகத் தமது தகவல்களை வழங்கி இந்தச் செயற்பாட்டுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தகவல்களை வழங்குவதற்கான இணைய இணைப்பு:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdz4QG_ve38MfTKww8fEthyEfqtSw-0z46CksKiB-zWVE4Q0g/viewform