மெதவச்சிய பகுதியில் நோய்வாய்ப்பட்ட யானைக்குட்டிக்கு தொடரும் சிகிச்சை!
மெதவச்சிய, வெவல்கெட்டிய பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்படும் யானைக்குட்டிக்கு வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவலின்படி, பண்டுலகம வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (21) குறித்த யானைக்குட்டிக்கு மேலதிக சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.
சிகிச்சை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில், யானைக்குட்டி தரையில் படுத்திருக்கும் நிலையில், வனவிலங்கு கால்நடை மருத்துவக் குழுவினர் அதற்குச் சிகிச்சை அளிப்பதைக் காணமுடிகிறது.
எனினும், யானைக்குட்டியின் தற்போதைய உடல்நிலை மற்றும் அது நோய்வாய்ப்பட்டதற்கான காரணம் தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.