ஞானசார தேரர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் – பௌத்த விவகார அமைச்சு அறிவிப்பு

arvloshan.com

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நாளை (ஒக்டோபர் 23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என பௌத்த விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஞானசார தேரரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபைக்கு பௌத்த விவகார அமைச்சு இந்தத் தகவலை அறிவித்துள்ளது.

சிறைச்சாலை வழிகாட்டுதல்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து, ஞானசார தேரர் நாளை காவி உடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு அமைய அவர் நாளை ஆஜர்படுத்தப்படமாட்டார் என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்கர் பேராசிரியர் வணக்கத்திற்குரிய கொட்டபிட்டியே ராகுல தேரர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய கலாநிதி இத்தபானே தம்மாலங்கார தேரருக்கு பௌத்த விவகார அமைச்சு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஞானசார தேரரை ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றத்திலிருந்து அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகாநாயக்க தேரருக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாக பௌத்த விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

பொலிஸாரின் பேஸ்புக் பதிவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

...

arvoshan.com

பூனையைக் காப்பாற்ற முயன்ற 32 வயதுப் பெண் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

...

arvoshan.com

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராக துமிந்த ஹுலங்கமுவ ஒருபோதும் செயற்படவில்லை – பிமல் பதிலடி!

...

arvoshan.com

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு; இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்குமா?

...

arvoshan.com

“இராஜினாமா செய்யுங்கள் அல்லது ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குங்கள்” – ஜனாதிபதிக்கு பிக்குகள் இறுதி எச்சரிக்கை!

...

arvoshan.com

மூன்று மாதங்களில் சிறைச்சாலைக் கைதிகளின் எண்ணிக்கை 5,068ஆல் குறைவு!

...

arvoshan.com

2027 முதல் வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை தகுதிப் பரிசோதனை?

...

arvoshan.com

சரிந்து விழுந்த காட்டு யானைக்குட்டி மீட்பு – மேலதிக சிகிச்சைக்காக உடவளவை அழைத்துச் செல்லப்பட்டது!

...

arvoshan.com

ரியாத், தம்மாம் விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம் – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு

...

arvoshan.com

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் 30,000-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

...

arvoshan.com

இனி மின்வெட்டு இல்லை! இலங்கையில் தொடர்ச்சியான மின்சார விநியோகம்

...

arvoshan.com

மெதவச்சிய பகுதியில் நோய்வாய்ப்பட்ட யானைக்குட்டிக்கு தொடரும் சிகிச்சை!

...

arvoshan.com

காலா ஓயா நீர்மட்டம் உயர்வு: நான்கு பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

...

arvoshan.com

ஒக்டோபர் 27 வரை தொடரக்கூடும் கடும் மழை!

...

arvoshan.com

பிரான்ஸில் மாணவர் போராட்டங்கள் மீதான அடக்குமுறை: இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

...