பொலிஸாரின் பேஸ்புக் பதிவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல் தொனியிலான பதிவு தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று (22) வெளியிட்ட அறிக்கையில், YOUTH FOR CHEnge அமைப்பு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில், “Think Twice Before You Open Your Mouth” (வாய் திறப்பதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள்) என்ற வாசகத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டிருந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குறித்த பதிவு அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள YOUTH FOR CHEnge அமைப்பு, அது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உத்தியோகபூர்வ முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறியுள்ளது.
இந்த முறைப்பாட்டைத் தாக்கல் செய்யும் நடவடிக்கையில், YOUTH FOR CHEnge அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி மகவிட்ட, தேசியக் குழு உறுப்பினர் உதார சந்தருவன் மற்றும் கொழும்பு மாவட்டக் குழு உறுப்பினர் டெரன்ஸ் ரொட்ரிகோ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.