சரிந்து விழுந்த காட்டு யானைக்குட்டி மீட்பு – மேலதிக சிகிச்சைக்காக உடவளவை அழைத்துச் செல்லப்பட்டது!
மெதவாச்சிய, வெவல்கெட்டிய பகுதியில் நோய்வாய்ப்பட்டு சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் காட்டு யானைக்குட்டி, பாதுகாப்பாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக உடவளவை யானைகள் இடைநிலைப் பராமரிப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவலின்படி, குறித்த யானைக்குட்டி நேற்று (ஒக்டோபர் 22) பாதுகாப்பாக அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.
யானைக்குட்டியின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அதற்குத் தேவையான மேலதிக மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்காக உடவளவை யானைகள் இடைநிலைப் பராமரிப்பு நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.