இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவரும் உறுப்பினர்களும் பதவியேற்பு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) புதிய தலைவரும் உறுப்பினர்களும் கடந்த நவம்பர் 02ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
இதன்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் வி. கே. மலல்கொட, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ளார்.
அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைக்கு அமைய, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன், ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களாக எஸ். வை. எம். கோமஸ், ஏ. எல். ஏ. ஏ. அஸீஸ், எஸ். எஸ். எஸ். பி. டி. எச். ஜயவர்தன மற்றும் பேராசிரியர் டி. ஜயசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையிலேயே இந்தப் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.