மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் – முதல்வர் விஜய்
சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தைத் தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் எனத் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றிய சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நாட்டுப்பற்று, தியாகம் மற்றும் சமூகநீதிக்கான பங்களிப்புகளைப் போற்றி வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது வீரமிக்க பேச்சாற்றலால் நாட்டு மக்களிடையே சுதந்திர உணர்வைத் தூண்டிய தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பியதுடன், இந்திய தேசிய இராணுவத்திற்கும் ஆதரவு திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளையும் லட்சியங்களையும் பின்பற்றி, அவரது வழியில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் முதல்வர் விஜய் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.