அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு – முதல்வர் விஜய் உத்தரவு

arvloshan.com

தமிழக அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில், போட்டித் தேர்வர்களின் வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (அக். 30) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போட்டித் தேர்வர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்பு உயர்வு, ஏற்கெனவே இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் வயதுத் தளர்வுகளுக்கு மேலதிகமாக அமையும். மேலும், குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-1 தேர்வு:

குரூப்-1 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 32 இலிருந்து 37 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 37 இலிருந்து 42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள்:

இந்தத் தேர்வுகளில் பொதுப் பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 30 இலிருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் தொடர்ந்து பொருந்தும்.

குரூப்-4 தேர்வு:

குரூப்-4 தேர்வில் பொதுப் பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 30 இலிருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் (பிசி), பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (பிசி-முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (எம்பிசி, டிஎன்சி) ஆகிய பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 32 இலிருந்து 37 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான வயது உச்சவரம்பு 35 இலிருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதல் கல்வித் தகுதி பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதிகளின்படி வயது உச்சவரம்பு கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போதைய விதிமுறைகளின்படி கூடுதலாக 10 ஆண்டுகள் வயதுத் தளர்வு வழங்கப்படும்.

இந்த வயது உச்சவரம்பு உயர்வு 2026 அக்டோபர் 30 முதல் நடைமுறைக்கு வருவதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வயது உச்சவரம்பை நெருங்கியுள்ள ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்தப் பணிகளுக்கு இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன?

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவையான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

குரூப்-1 தேர்வின் மூலம் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், வணிகவரித் துறை உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் மூலம் நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

அதேபோல், குரூப்-4 தேர்வின் மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகின்றன. தொழில்நுட்பப் பணிகளுக்காகத் தனியான ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் போட்டித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

நீண்டகாலக் கோரிக்கைக்கு தீர்வு

தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடத்தப்படாத சூழலில், வயது உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தேர்வர்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும் என்றும், பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், போட்டித் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பை ஐந்து ஆண்டுகள் அதிகரித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் – முதல்வர் விஜய்

...

arvoshan.com

விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்த இந்தியா ரூ.18.56 பில்லியன் ஒதுக்கீடு!

...

arvoshan.com

தமிழ்நாடு சிறையில் வலிப்பு வந்ததாக நாடகமாடி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்!

...

arvoshan.com

சபரிமலை மண்டல கால தரிசனத்திற்கு இணையவழி முன்பதிவு ஆரம்பம்!

...

arvoshan.com

பசுவதை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை – வேதங்கள், மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய நீதிமன்றம்

...

arvoshan.com

மியான்மர் ஆயுதப் பயிற்சி வழக்கு: வான்டைக் உள்ளிட்ட 7 பேருக்கு வெளிநாட்டில் தங்க அனுமதி நீடிப்பு

...

arvoshan.com

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய பசுமை அமோனியா உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவாகும் புதிய திட்டம்!

...

arvoshan.com

நிர்வாகிகள் கைது: தவெக அரசைக் கண்டித்து அக். 24-ல் நாதக மாநிலம் தழுவிய போராட்டம்!

...

arvoshan.com

ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இந்திய நிதி ஆலோசகர் உயிரிழப்பு! இணையத் துன்புறுத்தல் குறித்து விசாரணை

...

arvoshan.com

ஆறு மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை? – இந்தியா புதிய முன்மொழிவு

...

arvoshan.com

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார்: திமுக பெண் கவுன்சிலருக்கு காவல்துறை சம்மன்

...

arvoshan.com

தாராபுரம் தொகுதிக்கு ரூ.1,439 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்! – முதல்வர் விஜய் அறிவிப்பு

...

arvoshan.com

நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச் சூடு – நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது!

...

arvoshan.com

டெல்லியில் ராவணன் உருவ பொம்மையுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி பொம்மையும் எரிக்கத் திட்டம்!

...

arvoshan.com

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார் – வயது 75

...