தமிழ்நாடு சிறையில் வலிப்பு வந்ததாக நாடகமாடி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்!

arvloshan.com

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், வலிப்பு ஏற்பட்டதாக நாடகமாடி சிறை அதிகாரிகளைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளும், 36 மணிநேர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் அமைந்துள்ள சிறைச்சாலையில் திங்கட்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வலிப்பு ஏற்பட்டதைப் போன்று நடித்ததையடுத்து, ஏனைய கைதிகள் உதவி கோரி கூச்சலிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நிலைமையைப் பார்ப்பதற்காக சிறை அறைக்குள் நுழைந்த அதிகாரி ஒருவரை கைதிகள் ஒன்றிணைந்து தாக்கி அவரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதன்போது, மேலும் இரண்டு சிறைக் காவலர்களைத் தாக்கிய கைதிகள், அவர்களிடமிருந்த சாவிகளைக் கைப்பற்றி, சிறையின் பிரதான வாயிலைத் திறந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மொத்தம் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடிய நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு கைதி உடனடியாக மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார். கைதிகளின் தாக்குதலில் பல சிறை ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

ட்ரோன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தேடுதல்

சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் விசேட குழுக்களை அமைத்து விரிவான தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இந்த நடவடிக்கையில் ட்ரோன் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதன்போது, அருகிலுள்ள பேருந்து நிலையமொன்றில் வைத்து நான்கு கைதிகள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு கைதி முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது பிடிபட்டார்.

மேலும், சிறைச்சாலைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த எட்டு கைதிகளை ட்ரோன் கண்காணிப்பின் உதவியுடன் பொலிஸார் கண்டுபிடித்துக் கைது செய்தனர். இதே தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேலும் இரண்டு கைதிகளும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

இறுதியாக, தப்பியோடிய ஏனைய இரு கைதிகளும் புதன்கிழமை பொலிஸாரிடம் சரணடைந்தனர். இதன்மூலம் தப்பியோடிய 17 கைதிகளும் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர்.

பிரஸ் டிரஸ்ட் ஒஃப் இந்தியா (PTI) செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, மீண்டும் கைது செய்யப்பட்ட 17 கைதிகளும் உயர் பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

9 சிறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்

இந்தச் சம்பவத்தில் பாதுகாப்புக் கடமைகளில் அலட்சியமாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் ஒன்பது சிறை ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சிறைகள் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் சந்தீப் ரத்தோர், இந்தச் சம்பவத்துக்கு மனிதத் தவறுகளே காரணம் எனத் தெரிவித்துள்ளார். சிறைப் பாதுகாப்பு நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலையில் கடும் நெரிசல்

இந்தச் சம்பவம், குறித்த சிறைச்சாலையில் நிலவும் கைதிகளின் அதிகரிப்பு மற்றும் ஊழியர் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

அதிகாரபூர்வமாக 200 கைதிகளை மட்டுமே தங்கவைக்கக்கூடிய அந்தச் சிறைச்சாலையில், சம்பவம் இடம்பெற்றபோது 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைதிகள் தப்பியோடிய நேரத்தில் நான்கு சிறைக் காவலர்கள் மாத்திரமே கடமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆராய்வதற்காக ஆய்வுகளை முன்னெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியச் சிறைகளில் கைதிகளின் நெரிசல் குறித்த கவலை

இந்தச் சம்பவம், இந்தியச் சிறைச்சாலைகளில் நிலவும் கைதிகளின் அதிக நெரிசல் தொடர்பான விவாதங்களையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்தியச் சிறைச்சாலைகளின் கைதிகள் தங்கும் திறனை விடவும் 120.1 சதவீதம் அதிகமான கைதிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், இந்தியச் சிறைகளில் உள்ள கைதிகளில் 73 சதவீதத்துக்கும் அதிகமானோர் வழக்கு விசாரணை அல்லது விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைவதற்காகக் காத்திருப்பவர்கள் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்த இந்தியா ரூ.18.56 பில்லியன் ஒதுக்கீடு!

...

arvoshan.com

சபரிமலை மண்டல கால தரிசனத்திற்கு இணையவழி முன்பதிவு ஆரம்பம்!

...

arvoshan.com

பசுவதை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை – வேதங்கள், மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய நீதிமன்றம்

...

arvoshan.com

மியான்மர் ஆயுதப் பயிற்சி வழக்கு: வான்டைக் உள்ளிட்ட 7 பேருக்கு வெளிநாட்டில் தங்க அனுமதி நீடிப்பு

...

arvoshan.com

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய பசுமை அமோனியா உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவாகும் புதிய திட்டம்!

...

arvoshan.com

நிர்வாகிகள் கைது: தவெக அரசைக் கண்டித்து அக். 24-ல் நாதக மாநிலம் தழுவிய போராட்டம்!

...

arvoshan.com

ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இந்திய நிதி ஆலோசகர் உயிரிழப்பு! இணையத் துன்புறுத்தல் குறித்து விசாரணை

...

arvoshan.com

ஆறு மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை? – இந்தியா புதிய முன்மொழிவு

...

arvoshan.com

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார்: திமுக பெண் கவுன்சிலருக்கு காவல்துறை சம்மன்

...

arvoshan.com

தாராபுரம் தொகுதிக்கு ரூ.1,439 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்! – முதல்வர் விஜய் அறிவிப்பு

...

arvoshan.com

நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச் சூடு – நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது!

...

arvoshan.com

டெல்லியில் ராவணன் உருவ பொம்மையுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி பொம்மையும் எரிக்கத் திட்டம்!

...

arvoshan.com

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார் – வயது 75

...

arvoshan.com

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்! விஜய்யின் TVK கட்சி நிர்வாகி இந்தியாவில் கைது

...

arvoshan.com

கோவையில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு! 10 கி.மீ. ரோடு ஷோவில் திரண்ட பெண்கள்

...