பசுவதை வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை – வேதங்கள், மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய நீதிமன்றம்

arvloshan.com

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பசுக்களை இறைச்சிக்காகக் கொன்ற வழக்கில் மூவரைக் குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், அவர்களுக்கு கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

காந்திநகரில் உள்ள அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கின் தீர்ப்பில் இந்து மத நூல்களான வேதங்கள் மற்றும் மனுஸ்மிருதியில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை மேற்கோள் காட்டி, பசுக்களின் முக்கியத்துவம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.

திங்கட்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பின் ஆரம்ப நான்கு பக்கங்களில், பசுக்களின் கலாசார மற்றும் மத முக்கியத்துவம் தொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பசுக்கள் பிரபஞ்சத்தின் தாயாக மதிக்கப்படுவதாகவும், அவற்றில் 33 கோடி தெய்வங்கள் வசிப்பதாக நம்பப்படுவதாகவும் பண்டைய மத நூல்களை மேற்கோள் காட்டி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பசுக்களுக்கு வழங்கப்படும் மத மற்றும் கலாசார முக்கியத்துவத்தை அறிந்திருந்தும், குற்றவாளிகள் அவற்றைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்ய முயன்றதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த வாசிம் குரேஷி, மொஹம்மட் ரபீக் குரேஷி மற்றும் அஸ்பக் பஹெலிம் ஆகிய மூவருக்குமே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பால் தராத அல்லது வயதான பசுக்கள் மற்றும் எருமைகளை குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றைக் கொன்று இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

குஜராத் விலங்குகள் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் மற்றும் விலங்குகள் மீதான கொடுமைகளைத் தடுக்கும் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தண்டனை விதித்த மேலதிக அமர்வு நீதிபதி பி.ஆர். ராஜ்புத், பசுக்கள் தாயாகக் கருதப்படுகின்றன என்பதை அறிந்திருந்தும், குற்றவாளிகள் அவற்றைக் கொடூரமாகக் கொன்று, தலை, வயிறு, கால்கள் மற்றும் தோலைத் தனித்தனியாக வெட்டியதாகத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இறைச்சியை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது, பொலிஸார் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்ததாகவும், சுமார் 277 கிலோகிராம் மாட்டிறைச்சியைக் கைப்பற்றியதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்குச் சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படாவிட்டால், காலப்போக்கில் பசுக்கள் அழிந்துபோகும் நிலை ஏற்படலாம் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், பசுக்கள் வெறும் விலங்குகளாக மட்டுமன்றி, தர்மத்தின் அடிப்படையாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

மகரிஷி மனு, பசுக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை வைசிய வர்ணத்தினருக்கு வழங்கியதாகவும், பூமியிலுள்ள கால்நடைகளின் தாயாகப் பசுக்கள் கருதப்படுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்த இந்தியா ரூ.18.56 பில்லியன் ஒதுக்கீடு!

...

arvoshan.com

தமிழ்நாடு சிறையில் வலிப்பு வந்ததாக நாடகமாடி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்!

...

arvoshan.com

சபரிமலை மண்டல கால தரிசனத்திற்கு இணையவழி முன்பதிவு ஆரம்பம்!

...

arvoshan.com

மியான்மர் ஆயுதப் பயிற்சி வழக்கு: வான்டைக் உள்ளிட்ட 7 பேருக்கு வெளிநாட்டில் தங்க அனுமதி நீடிப்பு

...

arvoshan.com

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய பசுமை அமோனியா உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவாகும் புதிய திட்டம்!

...

arvoshan.com

நிர்வாகிகள் கைது: தவெக அரசைக் கண்டித்து அக். 24-ல் நாதக மாநிலம் தழுவிய போராட்டம்!

...

arvoshan.com

ஒரு மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இந்திய நிதி ஆலோசகர் உயிரிழப்பு! இணையத் துன்புறுத்தல் குறித்து விசாரணை

...

arvoshan.com

ஆறு மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை? – இந்தியா புதிய முன்மொழிவு

...

arvoshan.com

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார்: திமுக பெண் கவுன்சிலருக்கு காவல்துறை சம்மன்

...

arvoshan.com

தாராபுரம் தொகுதிக்கு ரூ.1,439 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம்! – முதல்வர் விஜய் அறிவிப்பு

...

arvoshan.com

நடிகர் டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச் சூடு – நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது!

...

arvoshan.com

டெல்லியில் ராவணன் உருவ பொம்மையுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி பொம்மையும் எரிக்கத் திட்டம்!

...

arvoshan.com

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார் – வயது 75

...

arvoshan.com

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 100 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்! விஜய்யின் TVK கட்சி நிர்வாகி இந்தியாவில் கைது

...

arvoshan.com

கோவையில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு! 10 கி.மீ. ரோடு ஷோவில் திரண்ட பெண்கள்

...