இணையத்தள உரிமையாளர்களுக்கு இலங்கை CERT முக்கிய சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

arvloshan.com

இலங்கையின் கணினி அவசரத் தயார்நிலை அணியான Sri Lanka CERT, PHP தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள் மற்றும் கணினி முறைமைகளில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்யுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதியிட்ட அறிக்கையொன்றின் மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள CERT, குறித்த பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக அங்கீகரிக்கப்படாத நபர்கள் கணினி முறைமைகளுக்குள் ஊடுருவுதல், தரவுகளைத் திருடுதல் மற்றும் சேவைகளின் செயற்பாடுகளைச் சீர்குலைத்தல் போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இணையத்தளங்கள் மற்றும் இணையப் பயன்பாடுகளை உருவாக்குவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாக PHP காணப்படுகிறது.

இந்நிலையில், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், இணையத்தள உரிமையாளர்கள் மற்றும் இணையத்தள உருவாக்குநர்கள் தமது முறைமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு CERT அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, PHP தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அனைத்து முறைமைகளையும் அடையாளம் காண்பதுடன், அவற்றில் பயன்படுத்தப்படும் மென்பொருள் பதிப்புகளைச் சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், PHP இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றி, பாதுகாப்பு மேம்படுத்தல்களைத் தாமதமின்றி நிறுவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், கணினி முறைமைகளின் பதிவுகளை (System Logs) ஆய்வு செய்து சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் எனவும் CERT வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு மேம்படுத்தல்களை உடனடியாக மேற்கொள்ள முடியாத, அதிக ஆபத்துள்ள முக்கியமான முறைமைகளுக்கு இணையம் ஊடான அணுகலைக் கட்டுப்படுத்துமாறும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையவழி அச்சுறுத்தல்களிலிருந்து நிறுவனங்களின் தகவல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஹோட்டல் முன்பதிவு பாதுகாப்பானதா? Booking.com நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை!

...

arvoshan.com

உலகம் முழுவதும் அரச மற்றும் வர்த்தக இணையத்தளங்கள் முடக்கம்! PHP மென்பொருளில் கடுமையான பாதுகாப்புக் குறைபாடு

...

arvoshan.com

செவ்வாய் கிரகத்தின் மர்ம நிலவுகளை ஆய்வு செய்ய ஜப்பானின் புதிய விண்வெளித் திட்டம்!

...

arvoshan.com

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி AI உள்ளிட்ட 40 தொழில்நுட்பங்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க சீனா திட்டம்!

...

arvoshan.com

பறக்கும் திறன் கொண்ட புதிய டெஸ்லா ரோட்ஸ்டரை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்!

...

arvoshan.com

ஆப்பிள் மீது OpenAI வர்த்தக இரகசியக் குற்றச்சாட்டு!

...

arvoshan.com

வீட்டு உபயோகத்திற்காக 'ஹோம்வியூ' ஸ்மார்ட் சாதனத்தை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்!

...

arvoshan.com

டிக் டாக் செயலிக்கு எதிராக நியூயோர்க்கில் வழக்கு: சிறுவர்களுக்கு ‘போலி’ பாதுகாப்பு அம்சங்கள் வழங்கி மோசடி

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோசாப்ட்

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு சர்ச்சை: நிகான் அறிவியல் ஒளிப்பட போட்டி வெற்றிப் பதிவு மீண்டும் ஆய்வு!

...

arvoshan.com

இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி: எலான் மஸ்க் சர்ச்சைக் கருத்து

...

arvoshan.com

சமூக ஊடகங்களால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: ஆய்வில் தகவல்!

...

arvoshan.com

பாதுகாப்புக் கவலைகளைத் தவிர்த்து புதிய செயற்கை நுண்ணறிவு முகவரை அறிமுகப்படுத்தியது ஒபன்ஏஐ!

...

arvoshan.com

ஷைனிஹன்டர்ஸ் ஊடுருவல் வழக்கு: ‘திருந்திய ஹேக்கர்’ நெதர்லாந்தில் கைது

...

arvoshan.com

மண்ணில் விழுந்து தீப்பற்றியது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்: சுற்றுவட்டப்பாதையை அடைந்து புதிய சாதனை!

...