“எமது கலாசாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது” – ராதிகா ஆப்தே கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம்

arvloshan.com

“எமது கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது” என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே, தென்னிந்திய கலாசாரம் குறித்துப் பேசிய கருத்துக்கு விளக்கமளிக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராதிகா ஆப்தேவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் பங்கேற்றிருந்த உரையாடல் நிகழ்ச்சி தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “முதலில் ராதிகா ஆப்தே எதைப் பற்றிப் பேசுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. நான் எனது தாய் மாமாவைக் காதலித்தது போன்ற கருத்தில் அவர் பேசினார். பின்னர் அவர் தாய் மாமன் உறவு குறித்து பேசுகிறார் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு விளக்கமளித்தேன்.

தென்னிந்தியாவில் தாய் மாமனைத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இருப்பதாக அவரிடம் தெரிவித்தேன். இந்தக் கலாசாரத்தை எவ்வளவுதான் விளக்கினாலும் அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். அதற்காக நாம் அங்கு சென்று எமது கலாசாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது அல்லவா?

இது எமது கலாசாரம் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும். தமிழகத்திலும் தெலுங்கு மக்களிடையேயும் தாய் மாமனைத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் உள்ளது. கேரளாவில் இந்த வழக்கம் இல்லை. கர்நாடகா குறித்து எனக்குத் தெரியாது. இதனை ஒரு தகவலாகவே தெரிவித்தேன்” என்றார்.

இதனிடையே, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், தன்னை எவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்வார் எனக் கேட்கப்பட்டபோது, “நிச்சயமாக ஒரு தென்னிந்திய நடிகையாகவே என்னை அடையாளப்படுத்துவேன். மலையாளத் திரைப்படங்கள் மூலம் எனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் தமிழில் தொடர்ந்தேன். தெலுங்குத் திரையுலகமும் எனக்கு முக்கியமானது. தமிழ் மற்றும் மலையாளம் எனது தாய் வீடு போன்றவை. தெலுங்கு எனது புகுந்த வீடு போன்றது” எனத் தெரிவித்தார்.

**ராதிகா ஆப்தே தெரிவித்த கருத்து என்ன?**

‘அக்கா’ வெப் தொடரை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற உரையாடல் நிகழ்ச்சியில் ராதிகா ஆப்தேவும் கீர்த்தி சுரேஷும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, தனது திரை வாழ்க்கையில் மிகவும் சவாலான கதாபாத்திரம் எது என ராதிகா ஆப்தேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் தனது தாய் மாமனைத் திருமணம் செய்துகொள்வது போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், தன்னை விட வயதில் மூத்த நடிகருடன் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததாகவும், அந்தச் சூழல் ஆணாதிக்கம் நிறைந்ததாக இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘எங்களது மௌனத்தை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்’ – மகள் குறித்த வதந்திகளுக்கு அர்ஜுன் பதிலடி

...

arvoshan.com

13 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகிறது GTA 6 – புதிய விளையாட்டு அம்சங்களுடன் அறிமுகம்

...

arvoshan.com

சிம்புதேவனின் ‘நவோரியா’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

...

arvoshan.com

“அடுத்த படம் தமிழில்தான்” – துல்கர் சல்மான் உறுதி!

...

arvoshan.com

பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ‘மூன் வாக்’ டிசம்பர் 24ஆம் திகதி வெளியீடு

...

arvoshan.com

குடும்பத்துடன் கிரீஸில் வலம் வந்த ரஜினிகாந்த் – புகைப்படங்களைப் பகிர்ந்த சவுந்தர்யா

...

arvoshan.com

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் வில்லனாக இணையும் சிவராஜ்குமார்!

...

arvoshan.com

15 ஆண்டுகால இசைப் பயணம்... நெகிழ்ச்சியுடன் நினைவுகளைப் பகிர்ந்த அனிருத்!

...

arvoshan.com

கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் ‘செங்குலம்’ – தலைப்பு போஸ்டர் வெளியீடு

...

arvoshan.com

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

...

arvoshan.com

GTA 6: முதல் வாரத்திலேயே ரூ.1.73 இலட்சம் கோடி வருவாய் ஈட்டும் எனக் கணிப்பு!

...

arvoshan.com

புத்தாண்டு தினத்தில் மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் ‘பைரவா’!

...

arvoshan.com

மணிரத்னம் இயக்கத்தில் ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29ஆம் திகதி உலகளாவிய ரிலீஸ்!

...

arvoshan.com

குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட ஆபரணம் சர்ச்சை: கரீனா கபூருக்கு சட்ட அறிவிப்பு!

...

arvoshan.com

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; வெளியான திருமணப் புகைப்படங்கள்

...