‘எங்களது மௌனத்தை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்’ – மகள் குறித்த வதந்திகளுக்கு அர்ஜுன் பதிலடி

arvloshan.com

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்துப் பரவி வரும் ஆதாரமற்ற வதந்திகளுக்கு, நடிகர் அர்ஜுன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், தங்களது மௌனத்தை இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்வதாகக் கருதக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

தனது இளைய மகள் அன்ஜனாவின் திருமணத்தின்போது, மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும் விவாதங்களும் எழுந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில், அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கருத்துத் தெரிவிப்பதைத் திட்டமிட்டுத் தவிர்த்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், விருப்பப்படி வாழும் சுதந்திரமும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அர்ஜுன், ஐஸ்வர்யா விரும்பினால் உரிய நேரத்தில் தனது தரப்பு விளக்கத்தை அவரே தெரிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.

எனினும், ஒரு தந்தையாகத் தனது மகளின் குணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து ஆதாரமற்ற, இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாழ்க்கையில் இருக்கும் நடிகர்கள் விமர்சனங்களையும் யூகங்களையும் எதிர்கொள்வது இயல்பானது என்றாலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் திட்டமிட்டு பரப்புவதற்கும் விமர்சனங்களுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, எவ்வித ஆதாரமும் இன்றி தனது மகளை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என முத்திரை குத்துவது உள்ளிட்ட இழிவான கருத்துகள் பொறுப்பற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல்கள் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதி காப்பது கண்ணியமான அணுகுமுறை எனத் தாங்கள் நம்பி வந்தாலும், அந்த மௌனத்தைத் தவறான செயல்களை ஏற்றுக்கொள்வதாகக் கருதக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் அண்மையில் இத்தாலியில் நடைபெற்றது.

இந்தத் திருமண நிகழ்வில், அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவரான உமாபதி தம்பி ராமையாவும் அவரது குடும்பத்தினரும் கலந்துகொள்ளாதது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அர்ஜுன் தற்போது இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

“எமது கலாசாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது” – ராதிகா ஆப்தே கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம்

...

arvoshan.com

13 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகிறது GTA 6 – புதிய விளையாட்டு அம்சங்களுடன் அறிமுகம்

...

arvoshan.com

சிம்புதேவனின் ‘நவோரியா’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு!

...

arvoshan.com

“அடுத்த படம் தமிழில்தான்” – துல்கர் சல்மான் உறுதி!

...

arvoshan.com

பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ‘மூன் வாக்’ டிசம்பர் 24ஆம் திகதி வெளியீடு

...

arvoshan.com

குடும்பத்துடன் கிரீஸில் வலம் வந்த ரஜினிகாந்த் – புகைப்படங்களைப் பகிர்ந்த சவுந்தர்யா

...

arvoshan.com

அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் வில்லனாக இணையும் சிவராஜ்குமார்!

...

arvoshan.com

15 ஆண்டுகால இசைப் பயணம்... நெகிழ்ச்சியுடன் நினைவுகளைப் பகிர்ந்த அனிருத்!

...

arvoshan.com

கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் ‘செங்குலம்’ – தலைப்பு போஸ்டர் வெளியீடு

...

arvoshan.com

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

...

arvoshan.com

GTA 6: முதல் வாரத்திலேயே ரூ.1.73 இலட்சம் கோடி வருவாய் ஈட்டும் எனக் கணிப்பு!

...

arvoshan.com

புத்தாண்டு தினத்தில் மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் ‘பைரவா’!

...

arvoshan.com

மணிரத்னம் இயக்கத்தில் ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29ஆம் திகதி உலகளாவிய ரிலீஸ்!

...

arvoshan.com

குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட ஆபரணம் சர்ச்சை: கரீனா கபூருக்கு சட்ட அறிவிப்பு!

...

arvoshan.com

கிரீஸில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; வெளியான திருமணப் புகைப்படங்கள்

...