இளம் பெண் எரித்துக் கொலை - வவுனியாவில் இடம்பெற்ற கொடூரம்

arvloshan.com

வவுனியாவில், பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் காயமடைந்தவர்களில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 02 வயது குழந்தையும், 07 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்கள் மற்றும் 42 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார், வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளுடன் இணைந்து தீயை அணைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் இளம்பெண்ணின் மரணத்தைத் தடுக்க முடியவில்லை.

தீ பரவிய போது மேற்படி வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

முகமூடி அணிந்த கும்பல் ஒன்று பிரவேசித்து வீட்டிற்கு தீ வைத்து சென்றமை சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குழுக்களுக்கிடையிலான மோதலின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமா என்பது பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்

...

ARVLoshan.com

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

...

ARVLoshan.com

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை

...

ARVLoshan.com

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

...

ARVLoshan.com

எரிபொருள் விலையில் திருத்தம்

...

ARVLoshan.com

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

...

ARVLoshan.com

ஜனாதிபதி தேர்தல்: ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் பதிவு

...

ARVLoshan.com

ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம்

...

ARVLoshan.com

தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம்

...

ARVLoshan.com

களனி பல்கலை மாணவன் உயிரிழப்பு: பல்கலை நிர்வாகத்தின் அசமந்தமே காரணம்

...

ARVLoshan.com

இலங்கையில் மெக்டொனால்டு துரித உணவகங்கள் மூடப்பட்டது

...

ARVLoshan.com

வட்டு இளைஞன் படுகொலை - மேலும் மூவர் கைது

...

ARVLoshan.com

அனுமதியின்றி பனை மரங்களை எடுத்து சென்றவர் கைது

...

ARVLoshan.com

அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்: கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம்!

...

ARVLoshan.com

நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

...