இலங்கை
சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் நேற்றயதினம் பொஸன் வழிபாடுகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட, சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ மஹா விகாரையில் நேற்றயதினம் பொஸன் வழிபாடுகள் இடம்பெற்றன.
வணக்கத்திற்குரிய கிங்தோட்ட நந்தராமவின் தலைமையில் பொஸன் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
நாடளாவிய ரீதியில் பல இடங்களிலிருந்தும் ஏராளமான பௌத்த மற்றும் இந்து பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு தானம் வழங்கப்பட்டது.