எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ - மண்டைதீவில் மக்கள் போராட்டம்

arvloshan.com

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது

இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்
மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(12) காலை 7.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் நகர்ந்து சென்று வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது கடற்படை முகாம் முன்பாக பொலிஸார் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். கலகமடக்கும் கடற்படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் கடற்படையினர் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் நிறைவில் போராட்டக்காரர்களுக்கு பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு எதிராக பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது "எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ, அதுக்குப் பிறகு பிஸ்கட் சாப்பிடுவோம்" என கடற்படை அதிகாரியை பார்த்து காணி உரிமையாளர் பேசினார்.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும் நில அளவை திணைக்களத்தினர் இன்று அங்கே பிரசன்னமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்

...

ARVLoshan.com

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

...

ARVLoshan.com

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை

...

ARVLoshan.com

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

...

ARVLoshan.com

எரிபொருள் விலையில் திருத்தம்

...

ARVLoshan.com

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

...

ARVLoshan.com

ஜனாதிபதி தேர்தல்: ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் பதிவு

...

ARVLoshan.com

ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம்

...

ARVLoshan.com

தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம்

...

ARVLoshan.com

களனி பல்கலை மாணவன் உயிரிழப்பு: பல்கலை நிர்வாகத்தின் அசமந்தமே காரணம்

...

ARVLoshan.com

இலங்கையில் மெக்டொனால்டு துரித உணவகங்கள் மூடப்பட்டது

...

ARVLoshan.com

வட்டு இளைஞன் படுகொலை - மேலும் மூவர் கைது

...

ARVLoshan.com

அனுமதியின்றி பனை மரங்களை எடுத்து சென்றவர் கைது

...

ARVLoshan.com

அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்: கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம்!

...

ARVLoshan.com

நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

...