"அத்துமீறுவது யார் என தமிழகத்துக்கு உண்மையை உரத்துச் சொல்லுங்கள்" தமிழ் எம்.பிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்.

arvloshan.com

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி,  இலங்கை கடற்படையினர் அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு கிழக்கின்  சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக தலைவர்களுக்கும் - மக்களுக்கும் தெளிவுபடுத்த முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழில் முறையான இழுவைமடித் தொழிலை மேற்கொண்டிருந்த நிலையில், 15 தமிழக கடற்றொழிலாளர்களும் இரண்டு மீன்பிடிப் படகுகளும் நேற்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக தமிழக ஊடகங்களில் வெளியாகி வருகின்ற செய்திகள் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற் படையினர் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக தமிழக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் தவறானவை எனவும், இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்களின்  வற்புறுத்தல்கள் காரணமாகவே எல்லை தாண்டி வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், குறித்த கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக கடமையை வடக்கு கிழக்கின்  சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும், தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்திய மத்திய - மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்

...

ARVLoshan.com

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

...

ARVLoshan.com

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை

...

ARVLoshan.com

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

...

ARVLoshan.com

எரிபொருள் விலையில் திருத்தம்

...

ARVLoshan.com

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

...

ARVLoshan.com

ஜனாதிபதி தேர்தல்: ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் பதிவு

...

ARVLoshan.com

ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம்

...

ARVLoshan.com

தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம்

...

ARVLoshan.com

களனி பல்கலை மாணவன் உயிரிழப்பு: பல்கலை நிர்வாகத்தின் அசமந்தமே காரணம்

...

ARVLoshan.com

இலங்கையில் மெக்டொனால்டு துரித உணவகங்கள் மூடப்பட்டது

...

ARVLoshan.com

வட்டு இளைஞன் படுகொலை - மேலும் மூவர் கைது

...

ARVLoshan.com

அனுமதியின்றி பனை மரங்களை எடுத்து சென்றவர் கைது

...

ARVLoshan.com

அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்: கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம்!

...

ARVLoshan.com

நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

...