தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு AI தொழில்நுட்பம்

arvloshan.com

தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அவசியமான நவீன வகுப்பறைகளையும தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்குவதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

அதன்படி கல்விச் செயற்பாடுகளை தொழில்நுட்ப முறையில் முன்னெடுப்பதற்கான உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குழுவொன்று வழங்கவுள்ளது.

19ஆம் திகதி  ஜனாதிபதி அலுவலகத்தில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம், மைக்ரோசொப்ட் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவர் புனித் சந்தோக் (Puneet Chandok), புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கும் ஆதரவிற்கும் வழிகாட்டலுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.


ஏனைய செய்திகள்

ARVLoshan.com

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்

...

ARVLoshan.com

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

...

ARVLoshan.com

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை

...

ARVLoshan.com

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

...

ARVLoshan.com

எரிபொருள் விலையில் திருத்தம்

...

ARVLoshan.com

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

...

ARVLoshan.com

ஜனாதிபதி தேர்தல்: ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் பதிவு

...

ARVLoshan.com

ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம்

...

ARVLoshan.com

களனி பல்கலை மாணவன் உயிரிழப்பு: பல்கலை நிர்வாகத்தின் அசமந்தமே காரணம்

...

ARVLoshan.com

இலங்கையில் மெக்டொனால்டு துரித உணவகங்கள் மூடப்பட்டது

...

ARVLoshan.com

வட்டு இளைஞன் படுகொலை - மேலும் மூவர் கைது

...

ARVLoshan.com

அனுமதியின்றி பனை மரங்களை எடுத்து சென்றவர் கைது

...

ARVLoshan.com

அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம்: கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம்!

...

ARVLoshan.com

நாணயத்தாள்களை சேதப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

...

ARVLoshan.com

சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

...