22ஆவது திருத்தம் கட்டுப்படுத்துவதற்கல்ல, விரைந்து நீதி வழங்குவதற்கே – நீதி அமைச்சர்

arvloshan.com

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமானது எவரையும் கட்டுப்படுத்துவதற்காகவோ அல்லது அடக்குவதற்காகவோ கொண்டுவரப்படவில்லை என்றும், மாறாக வழக்குகளை விரைவாக விசாரணை செய்து மக்களுக்கு உடனுக்குடன் நீதியை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டது என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (24) இடம்பெற்ற 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நீதி அமைச்சர், நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரந்த அளவிலான சீர்திருத்தங்களின் ஒரு அங்கமாகவே இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

“நாங்கள் அதிகாரத்தைக் காண்பிப்பதற்கோ, யாரையும் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கோ இந்தத் திருத்தத்தைக் கொண்டுவரவில்லை. வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தி, மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுக்கொடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்,” என அமைச்சர் நாணயக்கார இதன்போது வலியுறுத்தினார்.

2024ஆம் ஆண்டு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட விரிவான நீதித்துறை சீர்திருத்தச் செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இவை தனிமைப்படுத்தப்பட்டவை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் மக்கள் வழங்கிய ஆணைக் கொள்கைகளுக்கு அமைவாகவே இச்சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமான ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதில் நாட்டின் நீதி மற்றும் சட்டக் கட்டமைப்பு எவ்வாறு இயங்க வேண்டும் என்பதற்கான முக்கிய கொள்கைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதாக நினைவுகூர்ந்தார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட்டு நியாயமான பாதுகாப்புப் பெறுதல், வெளிப்படைத்தன்மை, திறம்படச் தொழிற்படுதல், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை என்பனவே அக்கொள்கைகளாகும் என அவர் அடையாளம் காட்டினார்.

“இந்த அடிப்படைக் கொள்கைகளின் மீதே நீதித்துறை கட்டமைப்பைச் செயற்படுத்துவோம் என நாம் மக்களுக்கு வாக்களித்தோம். அந்த வாக்குறுதியின் ஒரு பகுதியை நிறைவேற்றும் நாளாகவே இவ்விரு சட்டமூலங்களும் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இம்மாற்றங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த நீதி அமைச்சர், எதிர்க்கட்சியினர் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்குச் சுதந்திரம் உள்ளது எனக் குறிப்பிட்டதுடன், அரசாங்கம் தனது சீர்திருத்தப் பயணத்தை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்லும் என்றும் வலியுறுத்தினார்.

“எதிர்க்கட்சியினர் தமக்கு விருப்பமான எதையும் கூறலாம். ஆனால், மக்களுக்கான இந்தச் சீர்திருத்தப் பயணத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று காலை 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் ஆகியவற்றை இரண்டாம் வாசிப்புக்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் ஆரம்பமானது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘ஹரக் கடா’வின் உயிரினுக்கு அச்சுறுத்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு!

...

arvoshan.com

கொழும்பு செட்டியார் தெருவில் திருட்டு தொடர்பான விசாரணை - மொழிபெயர்க்க முன்வந்த இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்

...

arvoshan.com

தையிட்டி வழக்கு விசாரணைகள் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு - பெருமளவு நீர் வெளியேற்றம்

...

arvoshan.com

சீரற்ற வானிலை: நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

...

arvoshan.com

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

...

arvoshan.com

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகாத சிராந்தி ராஜபக்ஷ: வேறு திகதி கோரி கடிதம்

...

arvoshan.com

ஃபிட்ச் தரவுயர்வு: பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னேற்றம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்!

...

arvoshan.com

அனோஜன் மரண தண்டனை: பகிரங்கக் கருத்துகளைத் தவிர்க்க சுமந்திரன் கோரிக்கை

...

arvoshan.com

கல்கமுவ ‘காவந்திஸ்ஸ’ தனியன் யானைக்கு அவசர மருத்துவ சிகிச்சை ஆரம்பம்!

...

arvoshan.com

சாரதி அனுமதிப்பத்திர மருத்துவப் பரிசோதனைக்கு இலவச முன்பதிவு சேவை அறிமுகம்!

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவுக்கு ரூ. 70 மில்லியன் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தன கைது

...

arvoshan.com

158 எம்பிக்களின் ஒற்றுமை நாளை நிரூபிக்கப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

வெறிநாய் நோய் ஒழிப்பு: புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

...