ஃபிட்ச் தரவுயர்வு: பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னேற்றம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்!

arvloshan.com

இலங்கையின் கடன் தரநிலையை 'ஃபிட்ச் ரேட்டிங்ஸ்' (Fitch Ratings) நிறுவனம் உயர்த்தியுள்ளமையானது, நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பேரினப் பொருளாதார உறுதிப்பாடு  மற்றும் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்தையே பிரதிபலிக்கின்றது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய மேம்பாட்டு நிதி நிறுவனங்களின் அமைப்பின் 49 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் செப்டம்பர் 23 ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை கடந்து வந்த கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இந்த மீட்சி நிலமையானது நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதைக்கு மிக வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், "நாட்டின் பேரினப் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் வகையில், ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இலங்கையின் கடன் தரநிலையை 'CCC+' என்ற நிலையிலிருந்து 'B-' ஆக உயர்த்தியுள்ளதுடன், அதன் தொலைநோக்கு பார்வையை 'நிலையானது'எனவும் அறிவித்துள்ளது," எனத் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய சூழலில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதோடு நின்றுவிடாமல், அதனை நிலையான முதலீடுகள் , உயர் உற்பத்தித்திறன் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை நோக்கியதாக மாற்றுவதிலேயே தமது முழுமையான கவனம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் வலியுறுத்தினார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘ஹரக் கடா’வின் உயிரினுக்கு அச்சுறுத்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு!

...

arvoshan.com

கொழும்பு செட்டியார் தெருவில் திருட்டு தொடர்பான விசாரணை - மொழிபெயர்க்க முன்வந்த இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்

...

arvoshan.com

தையிட்டி வழக்கு விசாரணைகள் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு - பெருமளவு நீர் வெளியேற்றம்

...

arvoshan.com

சீரற்ற வானிலை: நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

...

arvoshan.com

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

...

arvoshan.com

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகாத சிராந்தி ராஜபக்ஷ: வேறு திகதி கோரி கடிதம்

...

arvoshan.com

அனோஜன் மரண தண்டனை: பகிரங்கக் கருத்துகளைத் தவிர்க்க சுமந்திரன் கோரிக்கை

...

arvoshan.com

கல்கமுவ ‘காவந்திஸ்ஸ’ தனியன் யானைக்கு அவசர மருத்துவ சிகிச்சை ஆரம்பம்!

...

arvoshan.com

சாரதி அனுமதிப்பத்திர மருத்துவப் பரிசோதனைக்கு இலவச முன்பதிவு சேவை அறிமுகம்!

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவுக்கு ரூ. 70 மில்லியன் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தன கைது

...

arvoshan.com

158 எம்பிக்களின் ஒற்றுமை நாளை நிரூபிக்கப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

வெறிநாய் நோய் ஒழிப்பு: புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

...

arvoshan.com

22ஆவது திருத்தம் கட்டுப்படுத்துவதற்கல்ல, விரைந்து நீதி வழங்குவதற்கே – நீதி அமைச்சர்

...