நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகாத சிராந்தி ராஜபக்ஷ: வேறு திகதி கோரி கடிதம்

arvloshan.com

முன்னாள் முதன்முதல்வர் சிராந்தி ராஜபக்ஷ, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இன்றைய தினம் (24) முன்னிலையாகத் தவறியுள்ளதுடன், விசாரணைக்குச் செல்வதற்கு வேறு திகதி ஒன்றைக் கோரி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

'சிரிலிய சவிய' நிதியத்தின் கணக்குடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்காகவே, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்றை தினம் ஆஜராகுமாறு அவருக்குப் பொலிஸாரால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்ஷ, தற்போது மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ளதால், அவரால் இன்றைய தினம் விசாரணைக்கு முன்னிலையாக முடியாமல்போயுள்ளதாக அவரது தரப்பால் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் சூழ்நிலையிலேயே, அவர் சார்பாகக் குறித்த பிரிவுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணைக்கு ஆஜராக புதிய திகதியொன்று கோரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘ஹரக் கடா’வின் உயிரினுக்கு அச்சுறுத்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு!

...

arvoshan.com

கொழும்பு செட்டியார் தெருவில் திருட்டு தொடர்பான விசாரணை - மொழிபெயர்க்க முன்வந்த இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்

...

arvoshan.com

தையிட்டி வழக்கு விசாரணைகள் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு - பெருமளவு நீர் வெளியேற்றம்

...

arvoshan.com

சீரற்ற வானிலை: நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

...

arvoshan.com

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

...

arvoshan.com

ஃபிட்ச் தரவுயர்வு: பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னேற்றம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்!

...

arvoshan.com

அனோஜன் மரண தண்டனை: பகிரங்கக் கருத்துகளைத் தவிர்க்க சுமந்திரன் கோரிக்கை

...

arvoshan.com

கல்கமுவ ‘காவந்திஸ்ஸ’ தனியன் யானைக்கு அவசர மருத்துவ சிகிச்சை ஆரம்பம்!

...

arvoshan.com

சாரதி அனுமதிப்பத்திர மருத்துவப் பரிசோதனைக்கு இலவச முன்பதிவு சேவை அறிமுகம்!

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவுக்கு ரூ. 70 மில்லியன் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தன கைது

...

arvoshan.com

158 எம்பிக்களின் ஒற்றுமை நாளை நிரூபிக்கப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

வெறிநாய் நோய் ஒழிப்பு: புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

...

arvoshan.com

22ஆவது திருத்தம் கட்டுப்படுத்துவதற்கல்ல, விரைந்து நீதி வழங்குவதற்கே – நீதி அமைச்சர்

...