ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு
மலையகப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் இன்று (24) மாலை மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இச் சரிவு காரணமாக குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் விழுந்துள்ள மண் மற்றும் இடிபாடுகளை அகற்றி, போக்குவரத்தை விரைவாக இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நார்வுட் பணிமனை அறிவித்துள்ளது.
மழை தொடர்வதால், அவ்வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.