158 எம்பிக்களின் ஒற்றுமை நாளை நிரூபிக்கப்படும்: பிரதமர் ஹரிணி

arvloshan.com

அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் ஒற்றுமை தொடர்பில் வெளிவந்து கொண்டிருக்கும் ஊகங்களை நிராகரித்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , அரசாங்கத்தின் 158 நாடாளுமன்ற உறுப்பினர்களிடையிலான ஒற்றுமை நாளைய தினம் நிரூபிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (24) இடம்பெற்ற அரசியல்மைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட நலன்களைத் தாண்டி, ஒரு கூட்டு இலக்கினாலேயே வழிநடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், "நாளை மாலை 7 மணியளவில் இந்த நாடாளுமன்றத்தின் நிலைமை என்ன என்பதை அனைவரும் கண்டுகொள்ள முடியும். இந்த 158 உறுப்பினர்களின் ஒற்றுமையை நாளைய தினம் தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

பல்வேறு வதந்திகளும் பிரசாரங்களும் பரப்பப்பட்டு வந்தபோதிலும், 158 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பிணைப்பும் ஒற்றுமையும் எள்ளளவும் அசையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய மாற்றத்திற்கு இந்தக் கூட்டு ஒற்றுமை எவ்வாறு பங்களிக்கும் என்பது நாளை மாலை வேளையில் தெளிவடையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை ஒரு சிறந்த நாடாக மாற்றமடையும் என்ற நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்த பிரதமர், அண்மையில் இடம்பெற்ற புகைவண்டிப் போராட்டத்தை அதற்குச் சான்றாகக் சுட்டிக்காட்டினார். போராட்டக் காலத்தில் பயணச்சீட்டுகளைப் பெற முடியாதிருந்த பயணிகள் சிலர், அதற்கு அடுத்த நாள் இரு பயணச்சீட்டுகளைப் பெற்று முந்தைய பயணத்திற்கான கட்டணத்தை ஈடுசெய்த நிகழ்வை நினைவுகூர்ந்தார்.

"இது ஒரு சிறிய செயலாகத் தோன்றினாலும், இந்த நாட்டைச் சிறந்ததாக மாற்ற முடியும் என்ற மக்களின் ஆழமான நம்பிக்கையையே இது காட்டுகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த பொதுச்சேவை, நேர்மையான தலைவர்கள், மக்களுக்குப் பொறுப்புக்கூறும் அரச நிறுவனங்கள் மற்றும் சுயாதீனமான, நீதியான நீதித்துறை என்பவற்றையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும், மக்களின் இந்த நம்பிக்கை அரசாங்கத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பெரும் பலமாக அமைகின்றது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘ஹரக் கடா’வின் உயிரினுக்கு அச்சுறுத்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு!

...

arvoshan.com

கொழும்பு செட்டியார் தெருவில் திருட்டு தொடர்பான விசாரணை - மொழிபெயர்க்க முன்வந்த இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்

...

arvoshan.com

தையிட்டி வழக்கு விசாரணைகள் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு - பெருமளவு நீர் வெளியேற்றம்

...

arvoshan.com

சீரற்ற வானிலை: நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

...

arvoshan.com

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

...

arvoshan.com

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகாத சிராந்தி ராஜபக்ஷ: வேறு திகதி கோரி கடிதம்

...

arvoshan.com

ஃபிட்ச் தரவுயர்வு: பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னேற்றம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்!

...

arvoshan.com

அனோஜன் மரண தண்டனை: பகிரங்கக் கருத்துகளைத் தவிர்க்க சுமந்திரன் கோரிக்கை

...

arvoshan.com

கல்கமுவ ‘காவந்திஸ்ஸ’ தனியன் யானைக்கு அவசர மருத்துவ சிகிச்சை ஆரம்பம்!

...

arvoshan.com

சாரதி அனுமதிப்பத்திர மருத்துவப் பரிசோதனைக்கு இலவச முன்பதிவு சேவை அறிமுகம்!

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவுக்கு ரூ. 70 மில்லியன் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தன கைது

...

arvoshan.com

வெறிநாய் நோய் ஒழிப்பு: புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

...

arvoshan.com

22ஆவது திருத்தம் கட்டுப்படுத்துவதற்கல்ல, விரைந்து நீதி வழங்குவதற்கே – நீதி அமைச்சர்

...