12 வயதுக்கு குறைந்தோருக்கு ஆசனப் பட்டி விலக்கு: பொலிஸ் விளக்கம்

arvloshan.com

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் நான்கு அரை அடி (4.5 feet) உயரத்திற்கும் குறைவான பயணிகளுக்கு சாதாரண ஆசனப் பட்டி அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை போக்குவரத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் யு.பி.ஜே. சேனாதீர தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சுட்டிக்காட்டிய அவர், மருத்துவ காரணங்களுக்காக ஆசனப் பட்டி அணிய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டவர்களுக்கும் இந்த விலக்கு பொருந்தும் எனத் தெரிவித்தார்.

குறைந்த உயரம் கொண்ட பயணிகள் சாதாரண ஆசனப் பட்டியை அணியும்போது, அது உடலின் சரியான பகுதியில் அமையாமல், நேரடியாக அவர்களின் கழுத்துப் பகுதியைச் சுற்றி அமையும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, விபத்துக்கள் ஏற்படும் போது கடுமையான காயங்கள் அல்லது ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதனாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் விளக்கியுள்ளார்.

அதேவேளை, இந்த விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் அத்தகைய பயணிகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி பயணிக்கலாம் என்று கருதிவிடக் கூடாது என வலியுறுத்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், அவர்களுக்குப் பொருத்தமான இடுப்புப் பட்டி போன்ற மாற்றுப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துவது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பொலிஸாரின் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மட்டும் சார்ந்திருக்காமல், வீதிப் பயன்பாட்டின் போது சாரதிகளும் பயணிகளும் தங்களின் சொந்தப் பாதுகாப்பிற்குத் தாங்களே பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

‘ஹரக் கடா’வின் உயிரினுக்கு அச்சுறுத்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு!

...

arvoshan.com

கொழும்பு செட்டியார் தெருவில் திருட்டு தொடர்பான விசாரணை - மொழிபெயர்க்க முன்வந்த இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்

...

arvoshan.com

தையிட்டி வழக்கு விசாரணைகள் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

...

arvoshan.com

நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு - பெருமளவு நீர் வெளியேற்றம்

...

arvoshan.com

சீரற்ற வானிலை: நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

...

arvoshan.com

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

...

arvoshan.com

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகாத சிராந்தி ராஜபக்ஷ: வேறு திகதி கோரி கடிதம்

...

arvoshan.com

ஃபிட்ச் தரவுயர்வு: பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னேற்றம் என்கிறார் மத்திய வங்கி ஆளுநர்!

...

arvoshan.com

அனோஜன் மரண தண்டனை: பகிரங்கக் கருத்துகளைத் தவிர்க்க சுமந்திரன் கோரிக்கை

...

arvoshan.com

கல்கமுவ ‘காவந்திஸ்ஸ’ தனியன் யானைக்கு அவசர மருத்துவ சிகிச்சை ஆரம்பம்!

...

arvoshan.com

சாரதி அனுமதிப்பத்திர மருத்துவப் பரிசோதனைக்கு இலவச முன்பதிவு சேவை அறிமுகம்!

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவுக்கு ரூ. 70 மில்லியன் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தன கைது

...

arvoshan.com

158 எம்பிக்களின் ஒற்றுமை நாளை நிரூபிக்கப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

வெறிநாய் நோய் ஒழிப்பு: புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

...