ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்: நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அழைப்பாணை குறித்த குழப்பம்

arvloshan.com

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச இன்று அதிகாலை (16) சிங்கப்பூர் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 1:10 மணியளவில் அவர் இப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இப் பயணத்தின்போது, ஷிராந்தி ராஜபக்சவின் மகன் ரோஹித்த ராஜபக்சவின் மைத்துனி யான ஆன் டி லிவேரா உடன் சென்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (15) கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷிராந்தி ராஜபக்ச, அங்கிருந்து நேராக வானூர்தி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார்.

அவர் வானூர்தி ஏறும் தருணத்தில், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன்னிலையில் எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் நாள் ஆஜராகுமாறு காவல்துறையினர் அவருக்கு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விசாரணைப் பிரிவால் ஏற்கனவே ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் ஷிராந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

அரவிந்த டீ சில்வா, அவரது மனைவிக்கு பிடியாணை ! தாயாரின் இறுதிச்சடங்கில் சம்பவம் !!

...

arvoshan.com

இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர புகையிரத வேலைநிறுத்தம்!

...

arvoshan.com

மட்டக்குளியில் சொகுசு கார் மோதி கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

...

arvoshan.com

எர்பஸ் முறைகேடு வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

...

arvoshan.com

அடுத்த 10 நாட்களில் நாடு முழுவதும் கனமழை: வெள்ளப் பெருக்கு அபாயம்!

...

arvoshan.com

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு ஒக்டோபர் 28 இல் மீண்டும் விசாரணை

...

arvoshan.com

சீன தூதுவர் - ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

...

arvoshan.com

கொழும்பில் 10 மில்லியன் ரூபாய் போலி காணி உறுதி மோசடி: 73 வயது முதியவர் கைது

...

arvoshan.com

நீதிமன்றில் ஞானசார தேரர் முன்னிலை: தலைமறைவுச் செய்திகள் மறுப்பு

...

arvoshan.com

விசாரணைக்கு முன்னிலையானார் திஸ்ஸ குட்டியாரச்சி

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ச தொடர்பான குற்றச்சாட்டுக்கு ராஜபக்ச குடும்பம் மறுப்பு!

...

arvoshan.com

இலங்கை - தாய்லாந்து: தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் விசா விலக்கு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்

...

arvoshan.com

வருமான வரி செலுத்துவதற்கு செப்டம்பர் 30 இறுதி நாள்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

...

arvoshan.com

சவுதி மேற்குப் பகுதி வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: நல்லூரில் வெண்கலச் சிலை திறப்பு!

...