கொழும்பில் 10 மில்லியன் ரூபாய் போலி காணி உறுதி மோசடி: 73 வயது முதியவர் கைது

arvloshan.com

கொழும்பு 07, Barnes பகுதியில் போலி காணிக் உறுதிகளைத் தயாரித்து, 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 73 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள இரண்டு காணிகளுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, அதனூடாகப் பணத்தை மோசடி செய்துள்ளதாகப் பெறப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தப் புலன்விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, களுத்துறை நகரப் பகுதியில் வைத்து நேற்று இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய இச்சந்தேகநபர், போலி காணிக் உறுதிகளை நீதிமன்றச் நடவடிக்கைகளின் போது சமர்ப்பித்துப் பயன்படுத்தியுள்ளதுடன், அக்காணிகளை 10 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்து அத்தொகையைக் கையாடல் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிகப் புலன்விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

அரவிந்த டீ சில்வா, அவரது மனைவிக்கு பிடியாணை ! தாயாரின் இறுதிச்சடங்கில் சம்பவம் !!

...

arvoshan.com

இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர புகையிரத வேலைநிறுத்தம்!

...

arvoshan.com

மட்டக்குளியில் சொகுசு கார் மோதி கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

...

arvoshan.com

எர்பஸ் முறைகேடு வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

...

arvoshan.com

அடுத்த 10 நாட்களில் நாடு முழுவதும் கனமழை: வெள்ளப் பெருக்கு அபாயம்!

...

arvoshan.com

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு ஒக்டோபர் 28 இல் மீண்டும் விசாரணை

...

arvoshan.com

சீன தூதுவர் - ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

...

arvoshan.com

நீதிமன்றில் ஞானசார தேரர் முன்னிலை: தலைமறைவுச் செய்திகள் மறுப்பு

...

arvoshan.com

விசாரணைக்கு முன்னிலையானார் திஸ்ஸ குட்டியாரச்சி

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ச தொடர்பான குற்றச்சாட்டுக்கு ராஜபக்ச குடும்பம் மறுப்பு!

...

arvoshan.com

ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்: நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அழைப்பாணை குறித்த குழப்பம்

...

arvoshan.com

இலங்கை - தாய்லாந்து: தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் விசா விலக்கு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்

...

arvoshan.com

வருமான வரி செலுத்துவதற்கு செப்டம்பர் 30 இறுதி நாள்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

...

arvoshan.com

சவுதி மேற்குப் பகுதி வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

...

arvoshan.com

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்: நல்லூரில் வெண்கலச் சிலை திறப்பு!

...