வெளிவிவகார அமைச்சில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியம் போலியானதா? – ஹர்ஷ டி சில்வா கேள்வி

arvloshan.com

இலங்கையின் பிரபல ஓவியர் ஸ்டான்லி கிரிந்தவினால் வரையப்பட்டதாகக் கூறப்படும் ஓவியம் ஒன்று வெளிவிவகார அமைச்சில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது உண்மையான ஓவியமா அல்லது போலியான பிரதியா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேள்வி எழுப்பிய அவர், அசல் ஓவியம் திருடப்பட்டு அதற்குப் பதிலாக போலியான ஓவியம் வைக்கப்பட்டுள்ளதா எனவும் வினவினார்.

ஓவியக் கலைஞரும் ஓவியங்களைப் புனரமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவருமான சர்ப்ஜித் கவுர் வழங்கிய கடிதமொன்றைச் சுட்டிக்காட்டிய ஹர்ஷ டி சில்வா, தற்போது அமைச்சில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியம் ஸ்டான்லி கிரிந்தவின் அசல் படைப்பு அல்ல என அவர் தனது மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்போது இரண்டு ஓவியங்களின் பிரதிகளைக் காண்பித்த அவர், அமைச்சில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியம் போலியானது எனக் குறித்த நிபுணர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சின் மிகவும் பிரபலமான ஓவியங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் படைப்பு, பல புத்தகங்களின் அட்டைகளிலும் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்திகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தான் பிரதி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் இதுபோன்ற இரண்டு ஓவியங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், அவை இன்னமும் பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இருக்குமென நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “இது எவ்வாறு நடந்தது? இந்த அறிக்கை உண்மையானதா? யாராவது அசல் ஓவியத்தைத் திருடினார்களா? அவ்வாறு திருடப்பட்டிருந்தால் அதனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” எனவும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்தச் சம்பவம் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டார்.

எனினும், சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் இடம்பெற்றதா என்பது தமக்குப் பிரச்சினையல்ல எனத் தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியம் என்றார்.

அதேவேளை, வெளிவிவகார அமைச்சின் ஊழியர்கள் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றுபவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் அமைச்சரையும் அரசாங்கத்தையும் பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த ஓவியத்தை 2009ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் எவ்வித கட்டணமும் இன்றி புனரமைத்ததாக சர்ப்ஜித் கவுர் தனது 2025 ஜனவரி 16ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2025 ஜனவரி 6ஆம் திகதி மீண்டும் ஓவியத்தைப் பரிசோதித்தபோது, அது அசல் ஓவியம் அல்ல என்பதைத் தாம் கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓவியத்தில் காணப்படும் கையொப்பம், நிறங்கள், முகங்களின் நுணுக்கங்கள் மற்றும் கட்டடக்கலை அம்சங்களில் வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அசல் ஓவியத்தில் இருந்ததாகவும் புனரமைப்பின்போது சரிசெய்யப்பட்டதாகவும் கூறப்படும் சேதங்கள் தற்போதைய ஓவியத்தில் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், தற்போது அமைச்சில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியம் போலியானது என்பது தனது கருத்து எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘Embassy to Rome’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஓவியம், 1997ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சினால் வரையச் செய்யப்பட்டதாகும்.

10 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட எண்ணெய் வண்ணத்திலான மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த ஓவியம், அனுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னர் பத்திகாபய (கி.மு. 22 – கி.பி. 7) ரோமப் பேரரசர் அகஸ்டஸ் சீசரைச் சந்திப்பதற்காக அனுப்பிய நான்கு சிங்களத் தூதுவர்களை அவர் வரவேற்கும் வரலாற்றுச் சம்பவத்தைச் சித்தரிக்கிறது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 1,193 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

...

arvoshan.com

சிங்கராஜ வனப்பகுதியில் வனவிலங்குகளைச் சேகரித்த குற்றச்சாட்டு: நான்கு சீனப் பிரஜைகளுக்கு 7.64 கோடி ரூபா அபராதம்

...

arvoshan.com

இந்தியாவின் சீரற்ற காலநிலையால் சில இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் – அமைச்சர் எச்சரிக்கை

...

arvoshan.com

சீனாவுடன் அறிவிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் முதலீடு எங்கே? – அரசாங்கத்திடம் நாமல் ராஜபக்ஷ கேள்வி

...

arvoshan.com

இலங்கையில் தொழிலாளர் சட்டங்களில் பாரிய திருத்தங்கள் – வேலை நேரம், மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களில் புதிய ஏற்பாடுகள்

...

arvoshan.com

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு – சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டைப் பெற நடவடிக்கை

...

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்

...

arvoshan.com

இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை – மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

...

arvoshan.com

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான உறவுகள்’ – சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

...

arvoshan.com

கீழ் கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று இரவு தற்காலிகமாக மூடப்படும்

...

arvoshan.com

PSTA சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் – விரிவான மக்கள் கருத்தறிதலை நடத்த எதிர்க்கட்சி வலியுறுத்தல்

...

arvoshan.com

யோஷித ராஜபக்ஷ, முன்னாள் கடற்படைத் தளபதி ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்

...

arvoshan.com

புதிய களனி பாலத்தின் நுழைவு, வெளியேறும் பாதைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன

...

arvoshan.com

மிதிகமவில் ரயிலுடன் ஜீப் மோதி விபத்து – STF அதிகாரிகள் நால்வர் காயம்; இருவர் கவலைக்கிடம்

...

arvoshan.com

கல்கிசை கடலில் மூழ்கி இந்தியப் பிரஜை உயிரிழப்பு

...