வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள் – இஸ்ரோ அறிவிப்பு

arvloshan.com

இந்தியாவின் அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோளான NVS-03, GSLV-F18 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 2,250 கிலோகிராம் எடையுடைய NVS-03 செயற்கைக்கோள், GSLV-F18 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குறித்த செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட புவிநிலை மாற்றச் சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், ராக்கெட்டின் அனைத்து அமைப்புகளும் எதிர்பார்த்தபடி சிறப்பாகச் செயல்பட்டதாகவும், செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட நீள்வட்டச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், குழு உறுப்பினர்கள், தொழில்துறை பங்காளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

NVS-03 செயற்கைக்கோளானது இந்தியாவின் அடுத்த தலைமுறை வழிகாட்டு செயற்கைக்கோள் தொகுப்பின் மூன்றாவது செயற்கைக்கோளாகும். இந்தியாவின் சுதந்திரமான பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பான NavIC (Navigation with Indian Constellation) சேவைகளைத் தடையின்றித் தொடரச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் L5 மற்றும் S அலைவரிசை சமிக்ஞைகளுடன், புதிய L1 அலைவரிசை சமிக்ஞையையும் இந்தச் செயற்கைக்கோள் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்திய நிலப்பரப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 1,500 கிலோமீற்றர் பிராந்தியத்திற்கும் வழிகாட்டுதல் சேவைகளை வழங்க முடியும்.

NavIC அமைப்பானது துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிதல், வழிகாட்டுதல் மற்றும் நேரக் கணிப்பு (Position, Navigation and Timing - PNT) ஆகிய சேவைகளை இந்தியாவிலும் அதனைச் சூழவுள்ள பிராந்தியத்திலும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகள் செயல்பாட்டுக் காலத்தைக் கொண்ட NVS-03 செயற்கைக்கோள், NavIC செயற்கைக்கோள் தொகுப்பின் செயல்பாட்டை மீண்டும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் ஏவப்பட்ட NVS-02 செயற்கைக்கோளைத் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் முழுமையாக நிலைநிறுத்த முடியாமல் போனதால், NavIC அமைப்பின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், NVS-03 இன் வெற்றிகரமான நிலைநிறுத்தத்தின் மூலம் நான்கு செயற்கைக்கோள்களைக் கொண்ட NavIC அமைப்பு மீண்டும் அதன் குறைந்தபட்ச செயல்பாட்டுத் திறனை எட்டியுள்ளது.

இந்த அமைப்பின் மூலம் ரயில்கள், வாகனங்கள் மற்றும் கப்பல்களை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதுடன், நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் துல்லியமான வழிகாட்டுதல் மற்றும் நேரக் கணிப்பு சேவைகளை வழங்க முடியும். அத்துடன், இந்தியாவின் 'ஒரே நாடு, ஒரே நேரம்' திட்டத்திற்கும் NavIC முக்கிய பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டமைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தத் திட்டம் இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான NavIC-ஐ மேலும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும் திறமையும் தொடர்ந்தும் நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ChatGPT ஆலோசனையால் வலிப்பு நோய்க்கான மருந்தை நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு – OpenAI நிறுவனத்துக்கு எதிராக பெற்றோர் வழக்குத் தாக்கல்

...

arvoshan.com

AI தொழில்நுட்ப வளர்ச்சி: மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் 60,000 ஊழியர்களுக்கு தன்னார்வ விலகல் திட்டம்

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு விரிவாக்கத்திற்காக 3,500 கோடி டொலர் பங்கு வெளியீடு – மெட்டா அறிவிப்பு

...

arvoshan.com

பொறியியல் படிக்காமலேயே பறக்கும் காரை உருவாக்கி அசத்திய இளைஞர்!

...

arvoshan.com

அரச நிறுவனங்களுக்கு அவசர சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

இணையம் வழியாக வாசனைகளைப் பரிமாறும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!

...

arvoshan.com

இணையத்தள உரிமையாளர்களுக்கு இலங்கை CERT முக்கிய சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

ஹோட்டல் முன்பதிவு பாதுகாப்பானதா? Booking.com நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை!

...

arvoshan.com

உலகம் முழுவதும் அரச மற்றும் வர்த்தக இணையத்தளங்கள் முடக்கம்! PHP மென்பொருளில் கடுமையான பாதுகாப்புக் குறைபாடு

...

arvoshan.com

செவ்வாய் கிரகத்தின் மர்ம நிலவுகளை ஆய்வு செய்ய ஜப்பானின் புதிய விண்வெளித் திட்டம்!

...

arvoshan.com

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி AI உள்ளிட்ட 40 தொழில்நுட்பங்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க சீனா திட்டம்!

...

arvoshan.com

பறக்கும் திறன் கொண்ட புதிய டெஸ்லா ரோட்ஸ்டரை அறிமுகப்படுத்திய எலான் மஸ்க்!

...

arvoshan.com

ஆப்பிள் மீது OpenAI வர்த்தக இரகசியக் குற்றச்சாட்டு!

...

arvoshan.com

வீட்டு உபயோகத்திற்காக 'ஹோம்வியூ' ஸ்மார்ட் சாதனத்தை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்!

...

arvoshan.com

டிக் டாக் செயலிக்கு எதிராக நியூயோர்க்கில் வழக்கு: சிறுவர்களுக்கு ‘போலி’ பாதுகாப்பு அம்சங்கள் வழங்கி மோசடி

...